சொல்கிறார்கள்
"ஏகம் பவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வரும் சாய்லட்சுமி: சொந்த ஊர் ஐதராபாத்ல, காந்தி மெடிக்கல் காலேஜ்ல படிச்சேன். இறுதியாண்டு படிச்சப்போ, "இன்டர்ன்ஷிப்'க்காக, சென்னையில இருக்கிற, காஞ்சி காமகோடி மருத்துவமனைக்கு வந்தேன். அப்போ நான் சந்திச்ச சம்பவம் தான், இப்போ நான் செஞ்சுட்டு இருக்கற முயற்சிகளுக்கான முதல் புள்ளியை வைத்தது.பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தை அது... "தொடர்ந்து வென்டிலேட்டர்ல தான் வைக்கணும்'னு டாக்டர் சொல்ல, "எங்களுக்கு அந்தளவுக்கு பண வசதி இல்ல சார்...'ன்னு, பெற்றோர், அழுதுகிட்டே, குழந்தையை வாங்கிட்டுப் போயிட்டாங்க. ரொம்ப நாளைக்கு அந்த சம்பவம், மனசை பாரமாக்கிட்டே இருந்துச்சு.படிப்பை முடிச்ச பிறகு, சென்னை, மேத்தா மருத்துவமனையில டாக்டரா பணியை ஆரம்பிச்சேன். மருத் துவ வசதி தேவைப்பட்ட ஒரு குழந்தைக்காக, நண்பர்கள் கிட்ட உதவி கேட்டேன். சேர்ந்த பணத்தை, குழந்தையோட பெற்றோர்கிட்ட கொடுத்தேன். அவங்க சொன்ன நன்றிக்கும், சிகிச்சை முடிஞ்சு. அந்தக் குழந்தை சிரிச்ச சிரிப்புக்கும் இணை, இந்த உலகத்தில் எதுவும் இல்லைனு தோணுச்சு.தொடர்ந்து, பல குழந்தைகளுக்கு, இப்படி உதவிகள் பெற்றுத் தந்தேன். ஒரு கட்டத்துல, இந்த உதவியை முழுநேர சேவையாக்க நினைச்ச நான், மருத்துவமனை வேலையிலிருந்து விலகினேன். சில உதவும் உள்ளங்களை இணைச்சிக்கிட்டு, 2007ல, "ஏகம் பவுண்டேஷன்' துவங்கினேன்.ஒவ்வொரு மருத்துவமனையுடனும் தொடர்பு கொண்டு, அவங்க மருத்துவமனையில் பண வசதி இல்லாததால சிகிச்சை தடைபட்டுப் போற குழந்தைங்க இருந்தா, தெரிவிக்கச் சொல்லிக் கேட்போம். நானும், நண்பர்களும், சமுதாயத்து எல்லா தரப்புலயும் உதவி கோருவோம்.சில மருத்துவமனைகள், எங்க வேண்டுகோளுக்கு இணங்க, ஏழ்மை நிலைக் குழந்தைகளோட மருத்துவச் செலவுக் கட்டணத்தை குறைச்சும் உதவறாங்க. சென்னையில் மட்டும், 50 மருத்துவமனைகள், எங்களோட இணைஞ்சுருக்காங்க. எங்களோட ஹெல்ப் லைன் நம்பர், 94459 22333. பண வசதியில்லாததால, மருத்துவம் செய்துக்க முடியாத குழந்தைகள் இருந்தா, எங்களுக்கு தெரியப்படுத்துங்க!
மருத்துவத்துக்கு ப் பண வசதிசெய்வோம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக