புதன், 3 அக்டோபர், 2012

கம்மியர் வேலையும் எளிதே

சொல்கிறார்கள்

"மெக்கானிக் வேலையும் ஈசி தான்!'கடந்த ஆறு ஆண்டுகளாக, மெக்கானிக்காக பணிபுரியும் சத்யா: எட்டாம் வகுப்பு முடிச்சதும், 14 வயசுலயே திருமணம், அடுத்தடுத்து குழந்தைகள், பிள்ளை வளர்ப்புனே காலம் கரைய, "இது மட்டும் தான் வாழ்க்கையா?'ன்னு யோசிக்கறதுக்குள்ள, பத்து வருஷம் ஓடிடுச்சு. சென்னை, தாம்பரத்தில் வீடு. குழந்தைகள் ஸ்கூலுக்குப் போயிட்டு இருந்தாங்க. "வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற, கம்யூனிட்டி காலேஜ்ல சேர்ந்து, ஏதாச்சும் கோர்ஸ் படிக்கட்டுமா?' ன்னு கணவர்கிட்ட கேட்டேன். "நல்ல முடிவு'ன்னு பாராட்டினார்.பொழுது போக்கா படிக்காம, உருப்படியா படிக்கணும்னு முடிவெடுத்தேன். நர்சிங், கேட்டரிங் மாதிரியான கோர்ஸ்களை விட, மெக்கானிக்கல் படிக்கணும்னு, மனசு, "டிக்' செய்துச்சு. ஏதோ ஒரு ஆர்வம், உள் மனசை உந்தித் தள்ளுச்சு.என் ஆர்வத்தைப் பார்த்து, ஓசூர் டி.வி.எஸ்., நிறுவனத்தில் பயிற்சியாளரா சேர்த்துக்கிட்டாங்க. அந்த சமயத்துல, குழந்தைகளை விட்டுட்டுப் போற தயக்கத்தை, தவிப்பை, எனக்குத் தராம, "நான் பார்த்துக்குறேன்'னு என்னை நிம்மதியோட அனுப்பி வெச்சார், என் கணவர்.அவர், தாம்பரத்துல இருக்கற, "மெப்ஸ்'ல குவாலிட்டி பிரிவுல வேலை பார்த்துக்கிட்டே, குழந்தைகளையும் கவனிச்சுக்கிட்டார்.நான், ஒர்க்ஷாப்ல பல ஆண்களுக்கு மத்தியில், ஒற்றைப் பெண்ணா இருந்தாலும், அவங்க எல்லாரும், "உன்னால முடியும்... செய்'ன்னு, "ஸ்பேனர்' பிடிக்கறதுல இருந்து, ஒவ்வொண்ணையும் பொறுமையா கத்துக் கொடுத்தாங்க.பயிற்சிக்குப் பிறகு, சென்னையில இருக்கிற, பிரபா டி.வி.எஸ்., நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்தேன். நான் லேடிங் கறதால, "இவளால, வண்டியில உள்ள ரிப்பேரை, ஒழுங்கா முடிச்சுட முடியுமா?' ன்னு ஆரம்பத்தில், சந்தேகத்தோட பார்த்த வாடிக்கையாளர்கள், சர்வீஸ் முடிஞ்சு, வண்டியை ஓட்டிப் பார்த்துட்டு, "க்ளீன் ஒர்க்... சூப்பர் சத்யா!'ன்னு பாராட்டும் போது, இந்த வேலை மேல, எனக்கு இன்னும் ஈர்ப்பு அதிகமாயிட்டே தான் இருக்கு.இது தான், என்னை, "எக்ஸ்பர்ட் மெக்கானிக்'குங்கற அடுத்த பதவிக்கு, பரிந்துரை செய்ற அளவுக்கு, உயர்த்தி இருக்கு. கூடிய விரைவில், இதுக்காக, டிரெயினிங் போகப் போறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக