வியாழன், 4 அக்டோபர், 2012

"விளையாட்டால் புத்துணர்ச்சி கிடைக்கிறது!'

சொல்கிறார்கள்


"விளையாட்டால் புத்துணர்ச்சி கிடைக்கிறது!'


டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஐஸ்வர்யா: என் அம்மா, வாலிபால் விளையாட்டில், தேசிய அளவில் சாம்பியனாக இருந்தவர். மாநில அளவிலான போட்டிகள் பலவற்றிலும் பங்கேற்று, கோப்பைகள் வென்றிருக்கிறார். அது தான் எனக்கு, விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால், சிறு வயதிலேயே, கண் கண்ணாடி போடும் நிலை, எனக்கு ஏற்பட்டு விட்டது. அதற்கேற்ற வகையில், ஒரு விளையாட்டை தேர்வு செய்யும் போது, என் அம்மா எனக்கு, டேபிள் டென்னிசை தேர்வு செய்தார்.ஐந்தாம் வகுப்பிலிருந்து, டேபிள் டென்னிஸ் விளையாடத் துவங்கினேன் என்றாலும், எட்டாம் வகுப்பிலிருந்து தான், என் உற்சாகம் வேகமெடுத்தது. பள்ளிகளுக்கு இடையேயான பல போட்டிகளிலும் பங்கேற்கத் துவங்கினேன். 2002 முதல், 2006 வரை, தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறேன். அனைத்திற்கும், என் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் தான் காரணம்.இந்த விளையாட்டில், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான், வீரர்கள் உள்ளனர். மற்ற விளையாட்டுகளுக்கு எப்படி, "ஸ்பான்சர்' கிடைப்பதில்லையோ, அது போலத் தான், டேபிள் டென்னிசுக்கும், "ஸ்பான்சர்' கிடைப்பது சிரமம்.ஒரு, "பேட்' வாங்க வேண்டுமானாலும் கூட, நிறைய செலவாகிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்த விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்.பெரும்பாலான பெற்றோர், பிள்ளைகள் பிளஸ் 2 வந்தவுடன் பாட்டு, நடனம், விளையாட்டு என, அனைத்தையும் ஒதுக்கி விட்டு, படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என, எதிர்பார்க்கின் றனர். பள்ளிகளில் நடக்கும் எல்லா விளையாட்டுகளிலும் கலந்து கொண்டபடியே தான், நான் படித்தேன். பத்தாம் வகுப்பில், 500க்கு, 475 மதிப்பெண்கள் பெற்றேன். கணிதப் பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றேன். விளையாடி விட்டு வந்தால், மனதிற்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக