சொல்கிறார்கள்
"உடல் சீராக உடலியக்கப் பண்டுவம் (பிசியோதெரப்பி)வேண்டும்!'
"சிறந்த பிசியோதெரபிஸ்ட்'
விருது பெற்றுள்ள சாந்தி: இந்த விருதிற்கு நபர்களைத் தேர்ந்தெடுக்க,
முக்கியமாக நான்கு விஷயங்களைப் பார்க்கின்றனர். குறைந்தது, 15 ஆண்டு, இந்த
துறையில் தொடர்ந்து இருக்க வேண்டும்; சர்வதேச மற்றும் தேசிய அளவில் ஆய்வுக்
கட்டுரை சமர்ப்பித்திருக்க வேண்டும்; இந்தத் துறை மூலம், சமூகத்திற்கு
ஏதாவது நல்லது செய்திருக்க வேண்டும். நான், 17 வருடமாக இந்தத் துறையில்
இருக்கிறேன். அச்சு ஊடகப் பணியாளர்களுக்கு, பணி சார்ந்து வரும் உடல்
நோய்கள் குறித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். வேலை சார்ந்த உடல்
பிரச்னையை ஒரு மருத்துவரின் சிகிச்சை தாண்டி, பிசியோதெரபி மூலம், என்ன
செய்யலாம் என, சொல்லியிருந்தேன். குறிப்பாக, கம்ப்யூட்டரில் வேலை
பார்க்கும் போது, என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்; எவ்வளவு நேரம் இடைவெளி விட
வேண்டும்; தசையும், எலும்பும் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்யலாம் என,
சொல்லியிருந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே போய், சிகிச்சை
கொடுப்பேன். "ஹோம்கேர்' தான் என் சிறப்பு. மருத்துவர்கள் ஆதரவு இல்லாமல்
இதை செய்யக்கூடாது; அது தான் பாதுகாப்பானது. மருத்துவர்கள் வழி நடத்துவதால்
தான் இதை செய்கிறோம். மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தோடு, நாங்கள்
கொடுக்கும் பிசியோ பயிற்சியும் விரைவில் சரி பண்ண வைக்கும். இந்தத்
துறையில், இப்போது தான், எங்களுக்கு கொஞ்சம் அங்கீகாரம் கிடைக்க
ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு பிசியோதெரபிஸ்ட்டிற்கும், அங்கீகாரம் கிடைக்க
வேண்டும். பிசியோதெரபிக்கு என, தனியாக நிறைய மையங்கள் வர வேண்டும். இந்த
விருதால், எனக்கு இன்னும் பொறுப்பு கூடியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக