ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மதுரை மல்லி இந்தியாவின் புவியியல் மலராகிறது: Madurai malli-geography flower of india

மதுரை மல்லி இந்தியாவின் புவியியல் மலராகிறது: பதிவுரிமை வழங்க முடிவு
மதுரை மல்லி இந்தியாவின் புவியியல் மலராகிறது: பதிவுரிமை வழங்க முடிவு
சென்னை, செப். 30-

மயங்க வைக்கும் நறுமணம் கொண்ட ‘மதுரை மல்லி’ நமது நாட்டின் புவியியல் அடையாளத்துக்குரிய முதல் மலராக அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டஙக்ளில் மதுரை மல்லி வகை பூச்செடிகள் பயிரிடப்படுகின்றன. இவ்வகை பூக்களின் இதழ்கள் வட்ட வடிவில், நான்கு அடுக்கு கொண்டவை.

மதுரை மல்லி மொட்டுக்கள் தாமதமாகவே விரிகின்றன. இதனால் மனதை மயக்கும் ஆழ்ந்த நறுமணம் கொண்ட இவ்வகை பூக்கள் பெண்களின் விருப்பதேர்வாக உள்ளது.

பயிரிடப்பட்ட 6 மாதங்களில், பலன் அளிக்கும் மதுரை மல்லி செடிகள், முதல் ஆண்டு மகசூலில் ஏக்கருக்கு 750 கிலோ வரை பூக்கும். 2-ம் ஆண்டில் 2 ஆயிரம் கிலோ, 3-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 500 கிலோ, 4-ம் ஆண்டிலிருந்து 3 ஆயிரத்து 500 கிலோ என்று இதன் மகசூல் அதிகரித்துக் கொண்டே போகும். தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை இவ்வகை செடிகளில் மொட்டு அரும்புவது இயல்பு.

மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் மதுரை மல்லியை விளைவித்து வருகின்றனர். தனியார் அமைப்பு ஒன்று, மதுரை வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மதுரை மல்லி விவசாயிகள் சங்கம் மூலமாக மதுரை மல்லி பூக்களுக்கு பதிவுரிமை கோரி சென்னையில் உள்ள புவியியல் அடையாள பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மேற்கண்ட அலுவலகத்தின் செய்தி குறிப்பில், மதுரை மல்லிக்கு இந்திய புவியியல் அடையாள மலர் என்ற தகுதியை தருவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் நபர்கள் தங்களது கருத்துக்களை எங்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விளை பொருட்கள் பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம் (2002)ன் படி, ஆட்சேபனைகள் ஏதும் பெறப்படபாத பட்சத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி, இந்தியாவிலேயே முதல் முறையாக பதிவுரிமை மற்றும் பாதுகாப்புரிமை பெற்ற முதல் மலர் என்ற பெருமையை மதுரை மல்லி பெறும்.

வணிகப் பொருள்கள் மற்றும் புவியியல் அடையாள விளைப்பொருட்கள் துணை பதிவாளர் ஒருவர் இதுபற்றி கருத்து கூறுகையில், இந்த பதிவின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மல்லி உற்பத்தியாளர்கள் பலன் அடைவார்கள். நாட்டின் பிற பகுதியினர் அங்கீகாரமற்ற வகையில் பதிவுரிமை பெற்ற பொருட்களை பயிரிட முடியாத வகையில் அவர்கள் சட்ட ரீதியான பாதுகாப்பும் பெறுவார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக