போர்க்குற்றங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மீனகம் பதியப்பட்ட நாள்April 22nd, 2012 நேரம்: 18:53
போரின்போது
சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா
அதிபரிடம் இந்தியக் குழு வலியுறுத்தியதா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல்,
இந்தியக்குழுவில் இடம்பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர்கள் நழுவிக்
கொண்டுள்ளனர்.
சிறிலங்கா சென்று திரும்பிய இந்திய
நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நேற்றுமாலை சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச்
சந்தித்தனர்.
அப்போது, “போரினால் பாதிக்கப்பட்ட
தமிழர்களுக்கு புனர்வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதேபோல போரின்போது நடந்த
மனிதஉரிமை மீறல்களும் முக்கிய பிரச்சினை. இதுகுறித்து சிறிலங்கா அதிபர்
மகிந்த ராஜபக்சவிடம் இந்தியக் குழு வலியுறுத்தியதா என்று செய்தியாளர்கள்
கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
ஞானதேசிகன் மற்றும் குழுவில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தன்,
சுதர்சன நாச்சியப்பன், மாணிக்தாகூர்,கிருஸ்ணசாமி ஆகியோரிடம் செய்தியாளர்கள்
தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர்கள் எவரும் நேரடியாகப் பதில் அளிக்காமல் நழுவிக் கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் அதே கேள்வியைக்
கேட்டபோது, அவர்கள் பாதியிலேயே செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு
எழுந்து சென்று விட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக