புதன், 25 ஏப்ரல், 2012

சிறுவனின் நினைவாற்றல் - வளரக்க வேண்டுமா? பணம் ஆக்க வேண்டுமா?

எந்த நாள் எந்தக்கிழமையில் வருவது எனச் சொல்வது ஒருவகைக் கணக்கு. இதன்படித்தான் பலரும் சொல்கின்றனர். இதனை  ஏதோ விந்தை ஆற்றலால் சொல்வதுபோல் மூடநம்பிக்கையாக்குவது சரியலல.  திறமை இருக்கும் பொழுது வளரக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை என்ன உளளது? ஏதோ கடவுளின் குழந்தை எனச் சொல்லிப் பணம் பண்ணுவதற்கான வழி போல் தெரிகிறது.  அறிவு நுட்பத்தை அறிவுக்குப் பொருந்தாத வகையில் வேண்டுமென்றே சொல்வதை எல்லாம் முதன்மை அளித்து வெளியிடக்கூடாது.  எந்திரன் படம் பார்த்து இருக்கலாம். எனவேதான், ஒரு நொடியில் பார்த்து உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டதுபோல் கூறுகிறார்கள்.          சிறுவனின் திளமையை  மேலும் வளர்க்கட்டும்! அவன் புகழ் பெறட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


சென்னை : ஆண்டின் தேதி, கிழமையை கேட்டால் உடனடியாக, பதில் சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறான் சிறுவன் ஸ்ரீராம் பாலாஜி.வேளச்சேரி சீதாபதி நகரில் வசிக்கும் வேலுசாமி, ஜீவப்ரியா தம்பதியருக்கு எட்டாவது வகுப்பு படிக்கும் விஷ்ணுப்ரியா என்ற மகளும், ஐந்தாவது வகுப்பு படிக்கும் ஸ்ரீராம் பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.

இருவரும், சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து வருகின்றனர்.இவர்களில், ஸ்ரீராம் எந்த ஆண்டில் எந்தத் தேதி, கிழமையைக் கேட்டாலும் யோசிக்காமல் சொல்லி ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறான். வரும், 2024ல் புதன் கிழமைகளில் எந்தெந்த தேதிகள் வருகின்றன என, கேள்வி கேட்டு முடித்ததும், அவன் பதில் வந்து விழுகிறது. அதேபோல், 1999ல் டிசம்பர் 10ம் தேதி என்ன கிழமை எனக் கேட்டாலும், உடனடியாக சொல்லி விடுகிறான்.அதேநேரம், 2013ம் ஆண்டில் பிப்ரவரி 29ம் தேதியைக் கேட்டால், அப்படி தேதியே கிடையாது என, மிகச் சரியாக பதிலளிக்கிறான். அந்த ஆண்டில் பிப்ரவரி 28ம் தேதியோடு முடிவடைந்து விடுகிறது.

ஸ்ரீராமுக்கு எப்படி இந்தத் திறமை வந்தது?

இதுகுறித்து அவனது சகோதரி விஷ்ணுப்ரியா கூறியதாவது:நான் அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவன் இப்படி அடிக்கடி சொல்வான். நானும் அதை அம்மா, அப்பாவிடம் சொல்வதுண்டு. ஆனால், அவர்கள் அவன் சிறுவன், எதையாவது பேசிக் கொண்டிருப்பான் என, கண்டு கொள்ளவில்லை.சமீபத்தில், நிலநடுக்கத்திற்கு முந்தைய நாள், இரவில் அழுது கொண்டே இருந்தான். அவனை எழுப்பி ஏன் அழுகிறாய் எனக் கேட்ட போது, "அம்மா, ஷீரடி சாயிபாபா சிலையை, கடலில் தூக்கிப் போடுகிறாள். பூமி பிளக்கிறது. அதனால் கடல் கொந்தளிப்பது என் கண்ணில் தெரிகிறது' என்றான்.முதலில் நாங்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், மறுநாள் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்தான், ராம் சொல்வதை கவனிக்க துவங்கினோம்.இவ்வாறு விஷ்ணுப்ரியா தெரிவித்தார்.

ராமின் ஆசிரியைகள் கூறுகையில், "அவன் யாருடனும் பேசமாட்டான். மிக மெல்லிய குரலில் தான் பதில் சொல்வான். சிரிக்கவே மாட்டான். இன்று தான் கொஞ்சம் சிரித்திருக்கிறான்' என்றனர்.

எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்ல முடிகிறது என, ராமிடம் கேட்ட போது, தன் கண் முன்பாக காலண்டர் ஓடுவதாக மட்டுமே தெரிவித்தான். அதற்கு மேல் அவனால் விளக்க முடியவில்லை.அவனது, அப்பாவின் மொபைல்போனில் உள்ள, 2000 முதல் 2030 வரையிலான காலண்டரை, கடந்த விடுமுறை நாட்களில் அவன் தொடர்ந்து பார்த்து வந்ததாகவும், அதனால், அவனுக்கு இந்த நினைவு சக்தி கிடைத்திருக்கலாம் எனவும் சிலர் கூறினர்.

அந்த நிமிடத்திலேயே மற்றொரு, மொபைல்போன் அவன் கையில் கொடுக்கப்பட்டு அதில், 2030க்குப் பின் வரும் ஆண்டுகளைப் பார்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. ராமும், அந்த தொடுதிரை மொபைல்போனில், 2034 வரையிலான ஆண்டுகளில், ஒரு மாதத்திற்கு ஒரு நொடி வீதம் புரட்டிப் பார்த்து வைத்து விட்டான்.பின் அவனிடம், 2033, 2032, 2034 என, வரிசையாக ஆண்டுகளில், குறிப்பிட்ட மாதங்களில் தேதி, கிழமைகள் சொன்னவுடன் அவன் மிகச் சரியாகப் பதிலளித்தான். இதுகுறித்து, மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாக, அவனது பெற்றோர் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக