வியாழன், 26 ஏப்ரல், 2012

சிறிலங்காவின் பாடத்திட்டத்துக்குள்ளேயும் நுழைகிறது சீனா

சிறிலங்காவின் பாடத்திட்டத்துக்குள்ளேயும் நுழைகிறது சீனா

china-lanka-300
சிறிலங்காவில் கபொத சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சீனமொழியும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது.
கொழும்பில் கன்பூசியஸ் நிலையத்தில் இடம்பெற்ற சீனமொழி பயிற்சி நிறைவு நிகழ்வில் பேசிய போது, சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா – சீன நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கென சீனமொழி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் பெளதிக வளங்களை வழங்க சீனா முன்வந்துள்ளதாகவும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக