வியாழன், 26 ஏப்ரல், 2012

ஆசிய வாகையர் ஆனேன்!

சொல்கிறார்கள்

ஆசிய சாம்பியன் ஆனேன்! 


ஸ்குவாஷ் வீராங்கனை அனாகா அலங்கமோனி: எனக்கு முதலில் அறிமுகம் ஆனது டென்னிஸ் தான். நான், "டிவி' பார்க்கும் நேரத்தைக் குறைக்க, ஆறு வயதிலேயே டென்னிஸ் மட்டையைக் கொடுத்து விளையாட வைத்தனர். நான் வெயிலில் விளையாடுவதைப் பார்த்து வருத்தப்பட்ட பாட்டி, ஸ்குவாஷ் ஆடுகளத்திற்கு மாற்றி விட்டார். ஆட்டம் ஆரம்பிக்கும் போது, ஸ்குவாஷ் பந்து மிகவும் மென்மையாக இருக்கும். முழுக்க கண்ணாடியால் கட்டமைக்கப்பட்ட ஸ்குவாஷ் ஆடுகளத்தில், பந்து மீண்டும் மீண்டும் பட்டு எழும்பும் போது, சூடாகி, வேகமாக எழும்ப ஆரம்பிக்கும்; அதற்கு ஈடு கொடுத்து ஆட வேண்டும். நான் டென்னிசிலிருந்து இதற்கு மாறியதும் மிகவும் கஷ்டப்பட்டேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, குடியரசு தின விழாவில் நடந்த போட்டியில், கோப்பைக்காக முதல் முறை பங்கேற்று, மூன்றாம் பரிசு ஜெயித்தேன். வெற்றியின் சுவை, என் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டது. அடுத்தடுத்து பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தேசிய சாம்பியன் ஆனேன். அடுத்ததாக, உலக அளவிலான பல போட்டிகளுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. பிளஸ் 2 படிக்கும் போது, பொதுத் தேர்வு பயத்திலேயே ஆசியக் குழு போட்டியில் நான் இரண்டு ஆட்டங்களில் தோற்க, "அவ்வளவு தான் அனாகா' என, முணுமுணுக்க ஆரம்பித்தனர். ஆசிய கோப்பை வந்தது; என் தேர்வுகளும் முடிந்திருந்தது. கடந்த ஆண்டில் யார்கிட்ட எல்லாம் தோற்றேனோ, அவர்களையெல்லாம் நான் ஜெயிக்க வேண்டும் என வெறியுடன் ஆடி, ஆசிய சாம்பியன் ஆனேன். வேகம், ஆக்ரோஷம் இரண்டும் ஆட்டத்தில் மட்டுமே இருக்கும்; மனதை எப்பவுமே அமைதியாக வைத்திருப்பேன்; கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஸ்குவாஷ் ஆடிக் கொண்டிருக்கிறேன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மெடிக்கல், இன்ஜினியரிங் இடம் கிடைத்தது எனக்கு. ஆனா, நான் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தரும் கல்லூரியில் சேர்ந்து, கணினி பொறியியல் படிக்கிறேன். பிடித்ததை செய்வதில் தான் சுவாரஸ்யம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக