தமிழர்கள் மீது வீசப்பட்ட இலங்கையின் கொத்தணிக்குண்டுகள்! உறுதிப்படுத்திய ஐ.நா நிலக்கண்ணி நிபுணர்
மீனகம் பதியப்பட்ட நாள்April 26th, 2012 நேரம்: 16:08
சர்வதேச மட்டத்தில் தடைசெய்யப்பட்டதும்
மனித குலத்திற்கு பேரழிவினை ஏற்படுத்த வல்லதுமான கொத்தணிக்குண்டுகளை
சிறிலங்காப் படையினர் தமிழர்களுக்கு எதிரான படைநடவடிக்கையின் போது
பாவித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்
தற்போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ்
இதனை ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணி
அகற்றும் நிபுணர் அலன் போஸ்டன் தெரிவித்துள்ளதாக Associated Press செய்தி
நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை முதல் தடவையாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கொத்தணிக் குண்டுகளை யுத்தத்தில்
பயன்படுத்தவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்சியாக மறுத்து வரும் நிலையில்
தற்போது ஐ.நா நிபுணரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ளது.
தமிழர் தாயகத்தின் புதுக்குடியிருப்புப்
பகுதியிலேயே வெடிக்காத நிலையில் உள்ள கொத்தணி குண்டுகள் மீட்கப்பட்டதாக
குறித்த நிபுணர் தெரிவித்துள்ளதாக Associated Aress செய்தி நிறுவனம் மேலும்
தெரிவித்துள்ளது.
இலங்கையின் யுத்த குற்றச் செயல் தொடர்பான
அனைத்துலக சுயாதீன விசாரணைகள் தொடர்பான அழுத்தங்களை மேலும் வலுப்படுத்தும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய குண்டுகளின் ஓர் தொகுதியே கொத்தணி குண்டு என அழைக்கப்படுகின்றது.
கொத்தணி குண்டு கண்டிக்கப்பட்டமை
தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத் தரப்போ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்போ
இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
இலங்கை அரசாங்கம் மறுக்கிறது
கொத்தணிக் குண்டுகள் என்ற வகைக்குள் வரும்
எந்தவொரு ஆயுதங்களையும் இலங்கை அரசாங்க ஆயுதப்படைகள் பயன்படுத்தவில்லை
என்று இராணுவப் பேச்சாளரான ருவான் வணிகசூரிய திட்டவட்டமாக
மறுத்திருக்கிறார்.
விடுதலைப்புலிகள் அதனைப்
பயன்படுத்தியிருப்பார்களா என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர்இ அப்படியான
குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும்இ ஆனால்இ தான் அதனை உறுதிப்படுத்த
முடியாது என்றும் கூறினார்.
இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று ஐநாவிடம் இராணுவம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இறுதிக்கட்டப் போரின் போது அரசாங்க படைகள்
வீசிய சில குண்டுகளில் இருந்த சிறிய கொத்துக்கொத்தான குண்டுகள், பல
இடங்களில் சிதறிவிழுந்து வெடித்ததாகவும், அல்லது சில ஆண்டுகள் தாழ்த்தி அவை
வெடித்ததாகவும், பொதுமக்கள், போர் விசாரணையின் போதும், வேறு பல
சந்தர்ப்பங்களிலும் கூறியிருக்கிறார்கள்.
கொத்தணிக் குண்டுகளை தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்று 2010 இல் அமுலுக்கு வந்தது.
ஆனால் இலங்கை, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்படவேறு சில நாடுகள் அதில் கைச்சாத்திடவில்லை.
கொத்தணிக்குண்டுகளை சட்டபூர்வமான ஆயுதங்கள் என்று கூறி அமெரிக்கா அவற்றை 1960 இல் வியட்நாமிய போரில் பயன்படுத்தியது.
வடக்கு இலங்கையின் வேறு ஒரு இடத்தில் இரு
சிறுவர்கள், நிலக்கண்டி ஒன்றில் அகப்பட்டு உயிரிழந்த செய்தி வந்த
சூழ்நிலையில் இந்த தகவலும் வந்திருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக