செவ்வாய், 24 ஏப்ரல், 2012


நீரிழிவு நோய் வகை ஒன்றிற்கு குத்தூசி (அக்குபங்க்சர்) மருத்துவத்தின் மூலமும்  தமிழ் இயற்கை மருத்துவத்தின் மூலமும் நலப்படுத்தும் வாய்ப்புஉள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை உரிய மருத்துவர்கள் ஏற்படுத்த வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 

சொல்கிறார்கள்

"டைப் 1 சர்க்கரை நோய்க்கு டாடா!':
  தினமலர் (புதிய  தலை முறை இதழிலிலிருந்து)
சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் விஜய் விஸ்வநாதன்: டைப் 1 சர்க்கரை நோய், எந்த வயதினரையும் பாதிக்கும்; குறிப்பாக, குழந்தைகளை. இந்தியாவில், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான குழந்தைகள், இந்த சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். டைப் 1 சர்க்கரை நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டால், அன்றிலிருந்து வாழ்க்கை முழுவதும், இன்சுலின் ஊசி இல்லாமல் வாழ முடியாது. கணையத்தில் உள்ள, இன்சுலினை சுரக்கும் செல்கள் அழிந்து போவதால், டைப் 1 வகை சர்க்கரை நோய் வருகிறது. பல நேரங்களில், கணையத்தில் உள்ள, 80 சதவீத செல்கள் அழிந்த பிறகே, சர்க்கரை நோய் இருப்பது தெரிய வரும். அதன் பின், இன்சுலின் அவர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்றாகிவிடும். ஆனால், இந்த செல்கள் எதனால், இப்படி அழிந்து போகின்றன என்பது தெரியவில்லை; இதற்கு, மரபியல் காரணி, காரணமாக இருக்கலாம். கடந்த 40 ஆண்டுகளாக, உலகம் முழுவதும் புதிது புதிதாக இன்சுலின் வந்திருக்கிறது. இன்சுலினை போட்டுக் கொள்ளும் முறையிலும், பல வகைகள் உள்ளன. ஆனால், இன்சுலின் இனி தேவையில்லை என்ற நிலை, இப்போது தான் வந்திருக்கிறது. தொப்புள் கொடியிலிருந்து எடுக்கப்படும் ரத்தத்தை, நேரடியாக கணையத்தில் செலுத்துவதன் மூலம், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "ஸ்டெம்செல்கள்' நிரம்பிய ரத்தம், அழிந்து போன கணைய செல்களை புதுப்பிக்கும். இதனால், பழைபடி உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரக்க ஆரம்பித்துவிடும். யாருடைய ரத்தத்தையும், யாருக்கும் செலுத்தலாம். இதற்கான அனுமதியைக் கேட்டு, மத்திய சுகாதாரத் துறையிடம் விண்ணப்பித்து இருக்கிறோம்; கூடிய விரைவில், அதற்கான அனுமதி கிடைத்துவிடும். இன்னும் ஆறு மாதங்களுக்குள், டைப் 1 பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக