கோத்தாபயவுக்கு கருணாநிதி பதிலடி
பதியப்பட்ட நாள்April 21st, 2012 நேரம்: 11:00
கருணாநிதிக்கு
ஈழம் அமைக்கும் ஆசையிருந்தால் அதை தமிழ்நாட்டின் அமைத்துக் கொள்ளட்டும்
என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறிய கருத்துக்கு,
திமுக தலைவர் மு.கருணாநிதி பதில் கொடுத்துள்ளார்.
நேற்று செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது,
“தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில், பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது என்ற கருத்தை உடையவன் நான்.
என்னைத் தலைவராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், அதே கருத்தைக் கொண்டது.
நாங்கள் பயங்கரவாதத்திற்கு தயாராக இல்லை.
தமிழ் மக்களின் உயிருக்கும், உடமைக்கும்
எதிராக, சிறிலங்காவில் சிங்களவர்களால், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட
கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற
கொடுமைகளும், நடைபெறக் கூடாது என்பதற்காகத் தான், நாங்கள் தனித் தமிழ் ஈழம்
வேண்டும் என்று கேட்கிறோம்.
இந்தியாவில் இருக்கின்ற மத்திய அரசு, சிறிலங்கா அரசைப் போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை.
தமிழர்கள், இங்கே நிம்மதியாகத் தான் இருக்கிறார்கள்.
அதனால், இந்திய அரசை விட்டுப் பிரிந்து போகவேண்டிய அவசியம் இப்போது இல்லை.“ என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக