ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

போர்க்குற்றவாளி பிரசன்ன சில்வாவுக்கு மென்போக்கு காட்டுவது ஏன்? – பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி

போர்க்குற்றவாளி பிரசன்ன சில்வாவுக்கு மென்போக்கு காட்டுவது ஏன்? – பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி

mcdonagh4
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான குறிப்பு ஒன்று 3 மாதங்களுக்கு முன்னர், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் மீதான இராஜதந்திர விலக்குரிமையை விலக்கிக் கொள்ள அந்தப் பணியகம் மறுத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“இது குறித்தும், இராஜதந்திர விலக்குரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் விவாதம் ஒன்றை நடத்தலாம் என்று எண்ணுகிறேன்.
அவர் விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால், போர்க்குற்றவாளிகளை சகித்துக் கொள்ளவதில்லை என்ற பிரித்தானியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடும்.
சிறிலங்கா மீது நாம் மென்போக்கை காட்டினால், அட்டூழியங்களை புரிபவர்களுக்கு நாம் அடைக்கலம் வழங்குபவர்கள் என்று ஏனைய ஆட்சியாளர்களும் நிச்சயமாக கருதத் தொடங்குவர்“ என்றும் அவர் மேலும் கூறினார்.
இதற்குப் பதிலளித்த பொதுச்சபையின் முதல்வர் சேர் ஜோர்ஜ் யங், நாடாளுமன்ற உறுப்பினர் மக் டொனாக்கின் கவலையைத் தாம் புரிந்து கொள்வதாகவும், இராஜதந்திர விலக்குரிமை தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பது முக்கியம் என்றும் தெரிவித்தார்.
இதுபற்றி வெளிவிவகாரச் செயலருடன் செவ்வாய்க்கிழமை பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும், மீண்டும் ஒருமுறை அதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று உறுதிபடக் கூற முடியாவிட்டாலும், மக் டொனாக்கின் கவலை தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் என்ன செய்கிறது என்பது பற்றிய பதில் ஒன்றை வழங்குமாறு கேட்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக