வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தமிழ் ஆண்டு காப்புக்குழு தொடக்கம்

தமிழ் ஆண்டு காப்புக்குழு தொடக்கம்
வலிமை வாய்ந்த குரலாகத் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முந்தைய அரசு சட்டசபையில் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய, தமிழக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட தை மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவது, கடைப்பிடிப்பது என்ற கொள்கையை அதே சட்டசபையில் எந்த போராட்டமோ, தமிழக எந்த அமைப்போ, மக்களோ போராடாத, கூக்குரலிடாதபோது தானே வலியவந்து தை முந்தைய அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்திருப்பது செய்த தவறையே திரும்பச் செய்யவைப்பது போலாகும் என்பதைக் கண்டித்து  சென்னை பிரஸ் கிளப்பில் இன்று காலை 11 மணியளவில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி  தமிழ்ப் புத்தாண்டு காப்பு மாநாடு கூடிய விரைவில் நடத்துவது பற்றியும், அதன் ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது பற்றியும், தமிழ் ஆண்டுத் தொடக்கத்தை தற்போதைய தமிழக அரசு சித்திரையை முதலாக வைத்துத் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

1 கருத்து:

  1. கவின்ஊடகச் செய்தியில் இளங்ககண்ணனார் பேசியது இலக்குவனார எனக் குறிக்கப்பெற்றுள்ளது. திருத்தி வாசித்துக் கொள்ள வேண்டுகின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பதிலளிநீக்கு