உணர்வைச் சிதைத்து உளவியல் தாக்கம் ஏற்படுத்தும் துரோக அரசியல் - போராளியின் மடல்
செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012 20:00
தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்துவரும் உரிமைப் போராட்டத்தை வலுவடையச் செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளை எந்தவொரு உணர்வுள்ள தமிழனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இரத்தம் சிந்தி முன்னெடுக்கப்பட்டுவந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவோ, அல்லது அப்போராட்டத்தை முன்னின்று வழி நடத்திய உலகத் தமிழர்களின் ஒரே சொத்தான தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களைக் குறை கூறவோ, அன்றி மண்மீட்புப் போரில் விடுதலைக்கு உரம் சேர்த்து வித்தாகிப் போன மாவீரர்களை விமர்சிக்கவோ எக்காரணம் கொண்டும் எக்காலத்திலும் அனுமதிக்க முடியாது.
இந்த நிலையில் சனல் 4 தொலைக்காட்சியில் தமிழீழ மக்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் தேசியத் தலைவர் தொடர்பான பிழையான செய்திகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கசிந்துவரும் செய்திகளால் தமிழர்கள் எல்லோரும் கொதித்துப்போய் உள்ளனர்.
சனல் 4 தொலைக்காட்சியானது என்றுமே தமிழ்ர்களுக்கு ஆதரவாகவோ அல்லது அவர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்னையை வெளிப்படுத்தியோ செய்திகளை வெளியிடவில்லை. மாறாக அவர்களுக்கு சிறீலங்காவில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவும், இரண்டு ஊடக வியலாளர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னணியிலுமே சிறீலங்கா அரசிற்கு எதிரான தனது செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது.
தமிழர்களின் பலமான ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின் தமிழர் தாயகத்தில் நடந்துமுடிந்த முள்ளிவாய்க்கால் பேரவலமும், அதன் பின்னரான சிங்கள பேரினவாதத்தின் இனவழிப்பு நடவடிக்கைளும் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுவாக பதிந்துபோன நிலையில் உளரீதியான தாக்கத்தில் அனைவரும் உறைந்துபோயிருந்த வேளையே சன்ல் 4 தொலைக்காட்சியில் முதன் முதல் வெளியான சிறீலங்கா அரச இயந்திரத்தின் தமிழர் மீதான கொடுமைகளெ சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தியிருந்தது. சர்வதேசத்தின் கண்களை சற்று திறக்க வைத்த இவ்விடையமானது தமிழர்களுக்கும் சிறு உத்வேகத்தை கொடுக்கவே சனல் 4 தொலைக்காட்சிக்கு தமது நன்றிகளை தெரிவித்த அதேவேளை அவர்களுக்குத் தேவையான வேறு சான்றுகளையும் கையளித்து சனல் 4 தொலைக்காட்சியின் உதவியுடனும், தமது திட்டமிட்ட நேர்த்தியான செயற்பாடுகளூடாகவும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும், இனவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தேடியும் சர்வதேச மட்டத்திலான பரப்புரைகளையும், இராஜதந்திர நகர்வுகளையும் தமிழர்களும், தமிழ் அமைப்புக்களும் முன்னெடுத்தன.
ஆனால் தமிழர்களின் நன்மதிப்பை பெற்றிருந்த சன்ல் 4 தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ளதாகக் கூறப்படும் "இலங்கை கொலைக்களங்கள் பாகம்-2, தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" ஆவணப் பகுதியில் தேசியத் தலைவர் தொடர்பான சர்ச்சைக்குரியதும், தமிழ்ர்களால் ஏற்றுக்கொள்லமுடியாததுமான காட்சிகள் வெளிவரும் நிலையில், தமிழர்களை சிதைத்துவிடுமோ என்கின்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது இவ்வாறு இருக்க சனல் 4 தொலைக்காட்சியில் எந்த விபரங்களும் வெளியிடுமுன்னரே காலம் பாத்துக் காத்திருந்த சில பச்சோத்திக் கோடாரிக் காம்புகள் தமது ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமது குடும்பத்தினர் சகிதம் இராணுவத்திடம் சரணடைத்ததாகவும், சித்திரவதைகளின் பின் படுகொலைசெய்யப்பட்டதாகவும் செய்திகளை பிரசுரித்துள்ளன.
எனவே இந்த செயற்பாடானது இக்காலத்திலும் எவராலும் மன்னிக்க முடியாததாகும். ஏனெனில் தேசியத் தலைவர் அவர்கள் எப்போதும் தனது குடும்பம், தனது வாழ்க்கை என்று சிறு வட்டத்துக்குள் வாழ்ந்தவர் அல்ல. மாறாக தனது நாடு, தனது மக்கள், தனது மொழி, என்று வாழ்ந்தவர். அதனால் தான் அவர் தமிழீழத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல உலக தமிழர்கள் மத்தியிலும் மதிப்போடு போற்றப்படும் தேசியத் தலைவராக தமிழர்களின் காவல் தெய்வமாக மதிக்கப்படுகின்றார்.
பச்சோந்திகளாக தாம் பிறந்த நாட்டிற்கும், தமது தாய் மொழியான தமிழ் மொழிக்கும் தமிழர்களின் எதிர்கால சந்ததிக்கும் துரோகம் இழைக்க முன்னின்று செயற்படும் ஊடகங்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
1987 ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அமைதிபடை என்ற போர்வையில் எமது தாயகத்தில் வந்திறங்கிய இந்திய இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் தீவிரம் அடைந்த நாள் முதல் இந்திய இராணுவம் எமது தாயகத்தை விட்டு வெளியேறும் வரை எங்கு சென்றாலும் தனது கையில் 5 லீற்றர் பெற்றோலுடன் சென்றுவந்தவர். ஏனெனில் தனக்கு மரணம் எப்போதும் வரலாம். ஆனால் தான் இறந்த பின்னும் தன்னை இனம் காணக்கூடாது. அதுமட்டுமல்ல முழுமையாக தனது உடல் கிடைக்கக்கூடாது என்பதற்காக கழுத்தில் நஞ்சுக் குப்பியும், மார்போடு குண்டும், கையில் பெற்ரோலுடனும் காடுகள் எங்கும் அலைந்து திரிந்தவர். அதற்கும் மேலாக 1988 ஆம் ஆண்டு முற்பகுதியில் தென்மராட்சிப் பகுதியில் அப்போது தென்மராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக இருந்த பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் கண்காணிப்பில் மறைந்து வசித்துவந்த தனது மனைவியையும், பிள்ளையையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துவரும்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களையே நேரடியாக எம் தேசியத் தலைவர் அனுப்பிவைத்திருந்தார். அத்தோடு அவர்களை அழைத்து வரும் வழியில் இராணுவத்தினரிடம் மாட்ட நேரிட்டால் சைனட் அருத்தி உயிரைத் துறக்கச்சொல்லுபடியும், சைனட் அருந்தும் வாய்ப்பு தவறும் பட்சத்தில் இராணுவத்தினரிடம் சிக்கவிடாது சுட்டுக்கொல்லும்படியும் தனது பிஸ்டலையே கொடுத்து கட்டளையிட்டிருந்தார்.
அப்படிப்பட்ட எம் தேசியத் தலைவரை இப்போது குடும்பத்தினருடன் சரணடைந்ததாக கூறும் உங்களைப் போன்ற அற்பர்களின் கூற்று எம்மைச் சுட்டெரிக்கின்றது. இக்கருத்தை சிறு குழந்தைகூட ஏற்றுக்கொள்ளாது.
தலைவர் அவர்கள் நினைத்திருந்தால் தனது குடும்பத்தை பாதுகாப்பாக வெளினாடுகளில் தங்கவைத்திருக்க முடியும். எத்தனையோ சட்ட திட்டங்கள், பாதுகாப்புக்களையும் தாண்டி வெளிநாட்டிற்கு தனது பிள்ளைகளை அனுப்பியும் அவர் தனது நாட்டிற்காகவே அவர்களை படிப்பித்து ஆளாக்கி மீண்டும் தாயகம் வரவளைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்தவர்.
முப்படை அமைத்து முழு உலகிற்குமே எடுத்துக்காட்டாகவும், தமிழர்களின் காலக் குறியீடாகவும், வரலாற்றின் வழிகாட்டியாகவும் விளங்கும் எம் தலைவரை பிழையாக சித்தரிப்பது என்றுமே ஏற்றுக்கொள்ளமுடியாது.
மக்கள் மத்தியில் விசக்கருத்துக்களைத் தூவி கடந்தகால போராட்டத்தையும், போராளிகளையும் தவறாக எடுத்துரைத்து போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுனிலையை விரிசலடைய வைத்து துரோக அரசியலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கின்றேன். குமுறும் வேதனைகளின் வெளிப்பாடுகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு சர்வதேசப் பரப்புகளில் கட்டளைக்காக ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சக போராளிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பார்கள் என நம்புகின்றேன்.
நண்பர்களையும் பகைவர்களாக மாற்றக்கூடியதே தேசியத் தலைவர் தொடர்பாக எழும் பிழையான தகவல்கள். உங்களின் இந்த செயற்பாட்டால் எமது சமுதாயமே சீர்குலைந்து சின்னாபின்னமாகப் போகும் நிலையை நீங்கள் ஏன் உணரவில்லையோ தெரியாது. தயவு செய்து நீங்கள் உண்மையான தமிழர்களாக இருந்தால் இவ்வாறான செயல்களை உடன் நிறுத்துங்கள். தவறுக்கு மன்னிப்புக் கோருங்கள். எமது தமிழும், தமிழீழ மண்னும் செழித்து வளர பாடுபடுங்கள். அதுவே உண்மையாக நீங்கள் செய்யும் நல்ல செயற்பாடாக அமையும். மரணித்துப் போன மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நீங்கள் செலுத்தும் உண்மையான காணிக்கையாக அமையும்.
எனவே இதனை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். நான் எழுதியிருக்கும் விடையங்கள் சிலரை பாதித்திருக்கலாம். இருப்பினும் இக் கருத்துக்களின் ஆளம் அவர்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.
சில வேளை சிலர் அல்லது சில ஊடகங்கள் என்னை தாக்கி எழுத முற்படுவர். என்னைப் பொறுத்தவரை இக்கருத்துக்களுக்காக என்மீது தாக்கி வசைபாடுபவர்கள் நிச்சயமாக நான் மேற்குறிப்பிட்டது போன்று காலம் பாத்துக் காத்திருந்த பச்சோத்திக் கோடாரிக் காம்புகளாகவே இருப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவர்களே இதுவரை காலமும் முகமூடி மனிதர்களாக தமிழர்கள் மத்தியில் நடமாடி தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க சிங்கள பேரினவாதிகளோடு மட்டுமன்றி தமிழினத் துரோகிகளோடு கூட்டாக செயற்பட்டவ்அர்கள் என்பதும் உலகத் தமிழர்களுக்கும் புரியும்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
நன்றி
உள்ளக் குமுறல்களுடன்...
போராளி - முகிலன்
குறிப்பிட்ட போராளி மேல் உள்ள செய்தியை இணைப்பதற்காக எமக்கு அனுப்பி வைத்த மடல் கீழ் இணைப்பு
உலகத் தமிழர்களுக்கும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் வணக்கம்,
குமுறும் வேதனைகளின் வெளிப்பாடுகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு சர்வதேசப் பரப்புகளில் கட்டளைக்காக ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் போராளிகளில் ஒருவனான முகிலன் ஆகிய நான் சில தமிழ் ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, ஆத்திரமும் அடைந்துள்ளேன். தரணி போற்றும் தேசியத் தலைவரை மிகவும் இழிவாக சித்தரித்து வெளியிட்டிருக்கும் இச்செய்தினானது வேதனை மிக்கதாகவும், மன்னிக்கமுடியாததாகவும் உள்ளது. அதனால் ஆற்றமுடியாத உள்ளக்குமுறலின் வெளிப்பாடாய் இம் மடலை எழுதியுள்ளேன். தயவு செய்து இதனை படித்து உங்களிற்கு ஏற்புடையதாக இருப்பின் உங்கள் நண்பர்கள், மற்ரும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
தமிழ் ஊடக நண்பர்களே உங்களின் அளப்பரிய சேவையே எமது போராட்டத்தை முன்னகர்த்தியதோடு உலகறியவும் செய்தது. அதற்கு நாம் தலைவணங்குகின்றோம். அதே வேளை தமிழ் ஊடகங்கள் எனும் போர்வையில் துரோகம் இழைக்கும் ஊடகங்களையும் நாம் மிகவும் உன்னிப்பாக அவதானித்தும் வருகின்றோம். எனவே இம் மடலை உங்கள் ஊடகங்களில் பிரசுரம் செய்ய முடிந்தவர்கள் பிரசுரம் செய்து முகமூடி மனிதர்களாக மக்கள் மத்தியில் விசக்கருத்துக்களை விதைத்துவரும் விசக்கிருமிகளை உலகத் தமிழர்களுக்கு முன்னிலைப்படுத்த உதவுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
போராளி முகிலன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக