புதன், 14 மார்ச், 2012

fans for my coffee

 சொல்கிறார்கள்



 நட்சத்திர ஓட்டலில் பில்டர் காபி தயாரிக்கும் ரத்னம்: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் தான் என் ஊர். நன்றாக சமைப்பேன். தேன்குழல், முறுக்கு, கொழுக்கட்டை என்று, பலகாரங்கள் செய்து அசத்துவேன். இதையே அடிப்படையாக வைத்து, வேலை தேட ஆரம்பிச்சேன். அனைவரும் தான் சமைக்கின்றனர்; நமக்கென்று சிறப்பை உருவாக்கிக் கொண்டு, வேலை கேட்கணும்னு தோன்றியது. பில்டர் காபி போடுவதில் நான் கில்லாடி; இதை சொல்லித் தான், நட்சத்திர ஓட்டலில் வேலை கேட்டேன்; காபி போட்டுக் காட்ட கூறினர். குடித்துப் பார்த்துவிட்டு, அருமையாக உள்ளதென்று, அப்போதே நியமித்து விட்டனர். பில்டர் காபி தயாரிப்பது மிகவும் சுலபம். 200 மில்லி தண்ணீரை, நன்கு கொதிக்க வைத்து, அதிலிருந்து 160 மில்லி எடுத்து, நான்கு டீஸ்பூன் காபி பவுடரைக் கலந்து, ஒரு நிமிடம் திரும்பவும் கொதிக்க வைக்க வேண்டும். காபி பவுடர் மிகவும் தரமானதாக இருக்க வேண்டும். பின், இதை வடிகட்டினால், டிக்காஷன் தயார். இது, திக்காக இருப்பது போல் தயாரிக்க வேண்டும். 200 மில்லி பாலை நன்கு காய்ச்சவும்; இதை, டிக்காஷனுடன் கலக்கவும்; தேவைப்படும் அளவிற்கு சர்க்கரை கலந்து பரிமாறலாம். நான் தயாரிக்கும் இந்த பில்டர் காபிக்கு, நிறைய ரசிகர்கள் உள்ளனர். ஓட்டல் நிர்வாகமும், எனக்கென்று பிரத்யேகமாக ஒரு காபி கார்னர் உருவாக்கித் தந்துள்ளது. ஆரம்பத்தில், காபி மட்டும் போட்டுக் கொண்டிருந்த நான், சுண்டல், லட்டு, ரவா லட்டு என்று, தென்னிந்திய சிற்றுண்டிகளையும் தயார் செய்கிறேன். தினமும், 11 மணி நேரம் வேலை இருக்கும். அந்த களைப்பு தெரியாமல் என்னை உற்சாகப்படுத்துவது, வாடிக்கையாளர்களின் பாராட்டுக்கள் தான். வீட்டில், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல், ஆயுளுக்கும் சமைத்துப் போடும் வேலையை மட்டும் பெண்கள் செய்கின்றனர். ஆனால், ஓட்டல்களில், கை நிறைய சம்பளம் வாங்கி சமைப்பதற்கு, ஆண்கள் கிளம்பி விட்டனர். ஓட்டல் கிச்சன்களிலும், பெண்கள் நிரம்ப வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக