செவ்வாய், 13 மார்ச், 2012

Electricity from drainage water: கழிவு நீரில் இருந்து மின்சாரம்


 கழிவு நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க சரியான நேரம் : மாநகராட்சி அசத்தல் திட்டம் அறிமுகம்

கோவை : தமிழகமே மின்தடை யால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் தேவையான மின்சாரத்தை, கழிவு நீரிலிருந்தே பெறும், புதுமையான திட்டத்தை, கோவை மாநகராட்சி, செயல்படுத்தவுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், இத்திட்டத்துக்குத் தேவைப்படும், கூடுதல் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை, மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.
மாநகராட்சி வார்டுகளில், வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பது, ஒவ்வொரு மாநகராட்சி நிர்வாகத்துக்கும் பெரும் சவால்தான். மின்தடை பிரச்னையும் இதனுடன் சேர்ந்து கொள்ள, வார்டு எண்ணிக்கை 72ல் இருந்து 100 ஆக உயர்ந்து விட்ட நிலையில், இப்பிரச்னைகளை, நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது, கோவை மாநகராட்சி.
ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ.377.13 கோடியில் செயல்படுத்தப்படும், பாதாள சாக்கடை திட்டத்தின் ஒரு பகுதியாக, 70 எம்.எல்.டி.,(ஒரு நாளைக்கு 70 மில்லியன் லிட்டர்) 60 எம்.எல்.டி., 40 எம்.எல்.டி., கொள்ளளவு கொண்ட மூன்று கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதில், 70 எம்.எல்.டி., சுத்திகரிப்பு திட்டம், உக்கடத்தில் துவங்கப்பட்டுள்ளது. இதூஞிடூடிஞி அஞிtடிதிச்tஞுஞீ குடூதஞீஞ்ஞு கணூணிஞிஞுண்ண் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கழிவு நீர் சுத்திகரிக்கப்படவுள்ளது. இந்தக் கழிவு நீரில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது மாநகராட்சி.
உக்கடத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்க, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு, மாதம் ரூ.எட்டு லட்சம் கட்டணமாக செலுத்துகிறது மாநகராட்சி. வரும் ஆண்டுகளில் மின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
மின்சாரத்தை சிக்கனமாக செலவிட வேண்டிய தற்போதைய சூழலில், சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவதற்கென பெரும் தொகையை, மாநகராட்சி செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் நேரங்களில் டீசல் ஜெனரேட்டரையும் இயக்கினால், சுத்திகரிப்புக்கென செலவிடும் தொகை, மேலும் அதிகரித்து விடும்.
ஆகவே இதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, கழிவு நீரில் இருந்து மின்சாரம் தயாரித்து, அந்த மின்சாரத்தின் மூலம் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஒண்டிப்புதூரில்அமைய வுள்ள 60 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட சுத்திகரிப்பு திட்டத்துடன், மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பமும், இணைந்து கொண்டதால், கூடுதலாக ஆறு ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், இதே பகுதியில் உள்ள தனியாரிடம் இருந்து, இதற்கான 14.34 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சிகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிவடைந்தவுடன், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவுள்ளன.
கழிவு நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இத்திட்டத்தின் வாயிலாக, மின்சார பயன்பாடு குறையும்.
மின்வாரியத்துக்கு மாதாமாதம் லட்சக்கணக்கான ரூபாய்களை கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்காது. மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்துக்கு ஏற்ப, பொருத்தமான திட்டத்தை மாநகராட்சி அமல் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

--தினமலர்ச் செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக