வெள்ளி, 16 மார்ச், 2012

vote mdmk for stable govt.of admk

அ.தி.மு.க. அரசு நிலைக்க ம.தி.மு.க.விற்கு வாக்களிப்போம்.

மூவர் விடுதலை, இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை, கொலைகாரக் காங்கிரசை எதிர்த்தல் முதலான தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கருத்திற்கு இணங்கப் புரட்சித்தலைவி ஆட்சி நடை போடுவதால் இவ்வாட்சி தொடர வேண்டும். அதே நேரம் எடுத்தேன் கவிழ்த்தேன் போன்ற செயல்கள் நிறை வேறாமல் இருக்கவும் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடும் என்னும் திருவள்ளுவர் வாக்கை உணர்ந்து இடித்துரை க்கும் ஒருவரை ச் சட்ட மன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தி.மு.க.வின் ஈழம் பற்றிய கொ லை காரச் செ யல்பாடுகளை மன்னிக்க முடியாது. எனவே, அதற்கு வாக்களித்தால் அக்கட்சி திருந்த வாய்ப்பு இருக்காது. நடுநிலை யுடனும் தமிழ் உணர்வுடனும் ம.தி.மு.க. செயல்படுவதால் அதற்குச் சட்ட மன்றத ்தில வாக்களிப்பது அரசிற்குக் கடிவாளளம் போட்டாற் போல் அமையும். அரசின் திட்டங்கள் விரைவிற்கும் அது உதவும். எனவ‌ே, நாட்டு நலன் கருதி, ஆளுங் கட்சியை ஆதரிக்காமல் ஆள்வோருக்கு வலிமை சேர்க்க ம.தி.மு.க.வைச் சட்ட மன்றத்திற்கு அனுப்புவது நமது கடமை யாகிறது.

எனவ‌ே, சங்கரன் கோயில் வாக்காளர்களாகிய நாம் எங்கிருந்தாலும் வாக்குப்பதிவன்று தொகுதிக்கு வந்து பம்ப�® �ம் வெ ற்றியுடன் சுழல அதற்கு வாக்களிப்போம்.


சங்கரன்கோயில் வாக்காள நண்பர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக