செவ்வாய், 13 மார்ச், 2012

Embroidery unit in the house



ஏதோ வகையில்விளம்பரம் தேவை!

துணிகளில், எம்ப்ராய்டரி மற்றும் டிசைன்கள் செய்து, பல வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ஹம்சவர்த்தினி: என் சொந்த ஊர் கோவை. பிறந்தது, வளர்ந்தது சென்னையில். திருமணத்திற்கு முன் வரை, அம்மா தான் எனக்கு, ஜாக்கெட், சுடிதார் எல்லாம் தைத்துக் கொடுப்பார். துணிகளுக்கான நிறங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் பார்த்துக் கொள்வேன். எங்கள் இருவரின் கற்பனையில் உருவாகும் ஆடைகளுக்கு, கல்லூரியில் ரசிகர் கூட்டமே உண்டு.திருமணம், குழந்தைகள் என்று ஆனதும், குடும்பத்தைக் கவனிப்பதில் நாட்கள் ஓடியது. குழந்தைகள் வளர்ந்ததும், எனக்கு ஓய்வு நேரம் அதிகமானது.

வீட்டிலேயே இருந்து தொழில் செய்யலாம் என்று தோன்றிய போது தான், என் கல்லூரி நாள் ஞாபகத்திற்கு வந்தது. என் திறமை மேல் இருந்த நம்பிக்கையால் உடனே வேலையில் இறங்கினேன்.எங்கள் வீட்டு அருகிலேயே இருந்த என் அம்மா வீட்டில் ஒரு அறை காலியாக இருந்தது. அந்த இடத்தைப் பயன்படுத்தினேன். நான்கு ஆட்களை வேலைக்கு எடுத்து, எம்ப்ராய்டரி யூனிட் ஒன்றை ஆரம்பித்தேன். அப்போது என்னிடம் இருந்தது இரண்டு ஆர்டர் தான். புடவை எம்ப்ராய்டரி முடிந்து வெளியே சென்றதும், நிறைய ஆர்டர்கள் குவிந்தன. இன்று, உலகம் முழுவதும் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தயாராகும் துணிகளை பார்வைக்கு வைக்க ஒரு இடம் தேவைப்பட்ட போது தான் எங்கள் வீட்டையே, "பொட்டிக்காக' மாற்றினேன். ஒரு அறையில், புதிதாக டெய்லரிங் யூனிட்டை துவங்கினேன். சரக்குகளை வைக்க ஒரு அறை, டிரையல் பார்க்க ஒரு அறை என்று, சிறப்பாக தொழிலை விஸ்தரித்தேன்.இந்த வியாபாரத்திற்கு முதல் அடி எடுத்து வைத்து, ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இது வரை எந்த விளம்பரமும் செய்ததில்லை. ஆனாலும், ஒவ்வொரு நாளும் புதிய வாடிக்கையாளர்களைப் பார்க்கிறேன். அத்தனை பேரும் ஒருத்தர் சொல்லி, ஒருத்தர் வந்தவர் தான். நல்ல வேலை, நியாயமான விலை, இவை இரண்டும் இருந்தால், எங்கும் வணிகம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக