திங்கள், 12 மார்ச், 2012

NASA is the future: "நாசா' தான் எதிர்காலம்!"

சொல்கிறார்கள்                                                                                                                                

"நாசா' தான் எதிர்காலம்!"நாசா' அறிவித்த கட்டுரைப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற திவ்யா, துர்கா தேவி:  



சென்னை மைலம் பொறியியல் கல்லூரியில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறோம். பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சவுடனே, "ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்' தான் படிக்கணும்னு ஆசைப்பட்டோம்; அந்த ஆசை நிறைவேறல.ஆனாலும், அந்த ஆசையை ஆசையாகவே நிறுத்தாமல், "நாசா'வின் இணையதளத்தில், எங்கள் பெயரை பதிவு செய்து, "நாசா'வைப் பற்றிய தகவல்கள் எப்போதும் எங்களுக்கு வந்து சேரும்படி பார்த்துக் கொண்டோம்.இதிலிருந்து வரும் தகவல்கள் மூலமே அறி வை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டோம். அவ்வப்போது,"நாசா' விண்வெளி அமைப்பில் உள்ள விஞ்ஞானிகளுடன், "சாட்' செய்து, அவர்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டோம்."மாற்று சக்தி மூலம் ஒரு நாட்டை எப்படி முன்னேற்றலாம்' என்ற தலைப்பில், கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பு வெளியானது. "நாசா' அறிவித்த அந்த போட்டிக்கு, நாங்கள் அனுப்பிய, "ஐடியா'வை பார்த்து, நெதர்லாந்து அழைத்தது, "நாசா' விண்வெளி அமைப்பு. போட்டியில் பங்கேற்ற இரண்டாயிரம் கட்டுரைகளில், சிறந்ததாக தேர்ந்தெடுத்த, 15 கட்டுரைகளில், எங்கள் கட்டுரையும் ஒன்று.தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற போட்டியாளர்கள் அனைவருமே வானவியல் துறையில் பிஎச்.டி., படித்தவர்கள்; ஆனால், நாங்கள் பொறியியல் கல்லூரி இளநிலைப் பட்டம் பெற்ற மாணவியர்."தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை, வளி மண்டலத்தில் உள்ள ஓசோனை பாதித்து, ஓசோனில் ஓட்டையை ஏற்படுத்துகிறது. இதனால், புவி வெப்பமயமாகிறது. இதை தடுக்க, வளி மண்டலத்தில், ஓசோனை அதிகரித்தால், இந்த பிரச்னை தீர்ந்துவிடும்' என்ற ஐடியாவைச் சொன்னோம்; இது, "நானோ' டெக்னாலஜியில் ஒரு வகை.இதற்கு, முதல் பரிசாக தங்கப் பதக்கம் கிடைத்ததோடு, 13 ஆண்டுகளாக நடந்த இந்தக் கருத்தரங்கில், ஆசியாவிலிருந்து கலந்து கொண்ட முதல் போட்டியாளர்கள் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது.இந்தப் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம், எங்களுக்கு நிறைய விஞ்ஞானிகள் நண்பர்களாகக் கிடைத்துள்ளனர். இனி, 'நாசா' தான் எங்கள் எதிர்காலம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக