புதன், 14 மார்ச், 2012

தலைவருக்கு முடிவுரை கட்டிவிடத் துடிக்கும் தலமைச்செயலகம்

  தலைவருக்கு சனல்4 ஊடாக முடிவுரை கட்டிவிட  துடிக்கும் தலமைச்செயலகம் என்று செயற்படும் அணியினர் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களுக்கு முடிவுரை கட்டிவிட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக சில தேசவிரோத சக்திகளும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்பட்டு வரும் சிலரும் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்த போதும் அது கைகூடவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு எப்பாடு பட்டாவது முடிவுரை எழுதிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கும் சிலர் புலிகளின் தலைமைச்செயலகம் தாமே என்று கூறும் அணியில் முக்கிய பொறுப்புக்களில் உள்ளார்கள் என்றும் அவர்கள் கடந்த ஆண்டே தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டதாக அறிவிக்க இருந்தமையும் அதன் பின் அதற்கான ஆதாரத்தை சிலர் அவர்களிடம் கோரிய போது அவ்வாறான ஆதாரத்தை அவர்களால் காட்ட முடியாமல் போய்யிருந்தமை சிலர் அறிந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த சதி வலையை சனல்4 ஊடாக நிறைவேற்ற வேண்டும் என்று தலைமைச்செயலகம் என்று கூறி செயற்படும் சிலர் முயன்றுள்ளதாக உயர்வு இணையத்திற்கு நம்பகமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.இதே தகவல் தமிழகத்தில் உள்ள சில தமிழ் உணர்வாளர்களுக்கும் சில முக்கிய பிரமுகர்களுக்கும் கிடைத்துள்ளதாகவும் உயர்வு அறிகிறது.இதை அவர்களே எம்மிடம் தெரிவித்தும் உள்ளனர்.

தமிழக தலைவர்களுக்கும்,தமிழ் உணர்வாளர்களுக்கும் கிடைத்துள்ள தகவலின் படி சனல்4 தொலைக்காட்சிக்கு தலைவர் தொடர்பான காணொளியை ஒளிபரப்புமாறு தலைமைச்செயலக அணியினர் கோரியதாகவும் இந்த முயற்சியில் தலைமைச்செயலக குழுவினர் கடந்த ஆண்டே ஈடுபட்டதாகவும் சனல்4 தொலைக்காட்சி முன்பு வெளியிட்ட காணொளியிலேயே தலைவர் தொடர்பாக வெளியிடுமாறு தலைமைச்செயலக அணியினர் சனல்4 இடம் கோரியதாகவும் அதற்கான ஆதாரங்களை அவர்களால் சனல்4 தொலைக்காட்சிக்கு வழங்க முடியாமல் போனமையால் அப்போது அது கைநழுவிவிட்டதாகவும் நாம் அறிகிறோம்.

ஆனால் தற்போது தலைமைச்செயலக அணியினர் சனல்4 தொலைக்காட்சியுடன் நல்லுறவை பேணுவதாகவும் அதனை பயன்படுத்தி சனல்4 தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ள காணொளியில் தலைவர் தொடர்பான காணொளியை ஒளிபரப்புமாறும் தலைவர் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக கூறுமாறும் அவர்களால் சனல்4 இடம் கோரப்பட்டது.ஆனால் சனல்4 தொலைக்காட்சி அவர்களுடனுள்ள நற்புறவின் காரணமாக தலைவர் தொடர்பான காணொளியை நாளை ஒளிபரப்பவுள்ளதாகவும் ஆனால் அந்த காணொளியில் சனல்4 தலைவர் அவர்கள் கொல்லப்பட்டதாக கூறவில்லை என்றும் அதிகாரபூர்வமற்ற அந்த காணொளியையே தாம் ஒளிபரப்புவதாகவும். கூறப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகம் என்று கூறி செயற்படுபவர்கள் இதற்கான பதிலை அல்லது இதை மறுத்தால் எம்முடன் தொடர்புகொள்ளவும் அது தொடர்பாக ஆராய்வதற்கு உயர்வு இணையம் தயாராகவுள்ளது.

- உயர்வு (http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=15634:-4-----------&catid=47:breaking-news-top&Itemid=67)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக