Reply
| show details 10:40 AM (0 minutes ago) |
<<அவருக்குச் சொந்தமான தொலைக்காட்சியிலே தமிழ் குதறப்படுகிறது! எல்லாம் ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே உனக்கல்லடி கண்ணே என்று சொன்ன பாதிரியார் கதைதான்!>>
உரிமை யாளர் அருளாளர் என்றதும் தவறாகக் கருதி சென்று விட்டீர்களா?
தவறு யாருடையது?
பணமொழி நாடுவோருக்குச் செம்மொழியாவது நம் மொழியாவது!
சன் என்றும் செவன்கிளெட் என்றும் ரெட் செயிண்ட் என்றும் பெ யர் வைக்கும் பொழுதே
உலகிற்கு உணர்வூட்டிய தமிழவேளால் தம் குடும்பத்தார்க்கு உணர்வூட்ட இயலவில்லை எனப் புரிந்து கொள்ள வேண்டாமா?
அல்லது அவரது கட்டுப்பாட்டில் அவர் வழி முறையினர் இல்லை; அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இவர் இருக்கிறார் எனப் புரிந்து கொள்ள வேண்டாமா?
தமிழவேள் குடும்பப்பற்றை விட்டுத்தமிழ்ப்பற்றைக் கொண்டார் எனில் அவருக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது. அவரது தமிழ் நலப் போராட்டங்கள் அவருயை குடும்பத்தாராலேயே குலைக்கப்படுவது கண்டும் வாளா விருப்பது ஏனோ?
வருத்தத்துடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
2010/9/14 thangav <thamilvaddam@yahoo.com>
- Hide quoted text -
கலைஞரின் தொல்லைக்காட்சி!
கலைஞர் தொலைக்காட்சியை நான் இந்நாள் வரை பார்த்ததில்லை. அதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. இன்று ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்த போது இங்குள்ள தமிழ் ஒன்று தொலைக்காட்சியில் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. அதுவும் மானாட மயிலாட நிகழ்ச்சியின் 3 ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சி. இந்த மானாட மயிலாட நிகழ்ச்சித் தலைப்பு கலைஞர் கருணாநிதி வைத்தது. பெயருக்கு ஏற்ப “மாதவிப் பெண்மயிலாள் தோகை விரித்தாள் காதல் மழை பொழியும் கார்முகிலாய் காதல் மழை பொழியும் கார்முகிலாய்..........." போன்ற திரைப்படப் பாடல்களை ஆவது ஆடல் அழகிகள் ஆடிக்காட்டுவார்கள் என எதிர்பார்த்தேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நாட்டியப் பேரொளி பத்மினியும் இணைந்து நடித்த இரு மலர்கள் திரைப்படம் சுவைஞர்கள் மனதில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நல்ல திரைக்கதை வளமான நடிப்புத் திறனையும் முழுதும் வெளிக்கொணரும் வகையில் அமைந்த இத் திரைப்படப்பில் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் பயிலும் சிவாஜியும் பத்மினியும் சிலப்பதிகாரத்தில் கோவலன், மாதவி இருவர் பற்றிய ஒரு நாட்டிய நாடகம் நடத்துகின் றனர். பத்மினி மயில் தோகையை முதுகில் அணிந்து கொண்டு ஒரு மயில் போலவே துள்ளித் துள்ளி ஆடுகையில் உடன் நடிகர் திலகம் பாடுவதாக அமைந்த இப்பாடலை டி.எம். சௌந்தரராஜன் கணீர் என்ற குரலில் பாடியிருந்தார். பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசை எம்.எஸ். விஸ்வநாதன். ஆனால் கலைஞர் தொலைக்காட்சியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் பரதம் மருந்துக்கும் இல்லை. எல்லாம் அரைகுறை ஆடையில் ஆண் பெண் இருபாலாரும் ஆடும் மேற்திசை குத்து ஆட்டங்களாகவே இருந்தன. இந்தக் கண்றாவி தோதாதென்று அந்த நிகழ்ச்சியை நடத்திய நடன ஆசிரியை கலா மற்றும் கலைஞர்கள் வாயில் தமிழ் அகப்பட்டுத் தவியாத் தவித்தது. யாருக்கும் முறையாகத் தமிழ் பேசவரவில்லை. கோலத் தமிழ்மொழியை ஆங்கிலத்தோடு கலந்து தமிங்கிலம் பேசினார்கள். முத்தமிழ் வித்தகர் 300 கோடி செலவழித்து செம்மொழி மாநாடு நடத்தி முடித்து மூன்று மாதம் கூட ஆகவில்லை! அவருக்குச் சொந்தமான தொலைக்காட்சியிலே தமிழ் குதறப்படுகிறது! எல்லாம் ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே உனக்கல்லடி கண்ணே என்று சொன்ன பாதிரியார் கதைதான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக