செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

natpu இஸ்லாமிய மக்கள் இன்று தமது நோன்பு பெருநாளைக் குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.
நம் நாட்டில் மட்டுமன்றி, உலகில் எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் வழ்கின்றனரோ அங்கெல்லாம் இப்பெருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக இஸ்லாமியர்களின் மாதங்கள் யாவும் சந்திரனை மையமாகக் கொண்டே கணிக்கப்படுகிறது. நடைமுறை உலகில் நாம் சூரிய ஆண்டை பின்பற்றுவது போல முஸ்லிம்கள் சமய விடயங்களில் சந்திர ஆண்டையே பின்பற்றுகின்றனர். இதன் காரணமாகவேதான் பிறை பார்த்து நோன்பு நோற்று பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றனர்.
அதாவது றமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று சவ்வால் மாதம் முதலாவது பிறை கண்டதும் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இந்த அடிப்படையில் இஸ்லாமியர்களைப் பொருத்தவரை பிறை பார்ப்பது முக்கியமாகிறது.
இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் முஸ்லிமாக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(றமழான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை. அதே நேரம் பெருநாள் தினத்திற்கு முன் ஒரு மாதகாலம் நோன்பு நோற்பது என்பதும் சாதாரண காரியமல்ல. ஏனெனில் அதிகாலை சுமார் 4.45 மணிமுதல் மாலை சுமார் 6.15 மணிவரை ஏறத்தாழ 14 மணித்தியாலங்கள் எந்த உணவோ பானமோ உட்கொள்ளாமல் தான் நோன்பு நோற்கப்படுகிறது. உணவுத்தொகுதியில் ஒரு துளி உணவோ, ஒரு துளி நீரோ சென்றடைவதில்லை. அதுமட்டுமல்ல, அழகிய அல்லது ரசனை கொண்ட எதனையும் நோக்குவதில் இருந்து தவிர்ந்து கொள்வதும் வேண்டற்பாலது. உதாரணமாக ஒரு நடனத்தை அல்லது இச்சை தரும் எக்காட்சியையும் பர்க்காது இருப்பதும் முக்கியம். ஐம்புலன்களும் அடக்கப்படுவதே உண்மையான நோன்பு என வழங்கப்படுகிறது.
natpu இந்நாளில் மனக்கட்டுப்பாடும் அத்தியாவசியமாகிறது. பாவமான விடயங்களை, மனோ இச்சை தரக் கூடிய விடயங்களை, மனதால் கூட நினையாதிருத்தல் அவசியமாகும். இப்படியாக அனைத்து ஆசாபாசங்களையும் துறந்து, ஒருமாதம் கடத்துவது என்பது நல்ல பயிற்சி இன்றேல் சிரமமான காரியமாகும். அத்துடன் இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். தான தர்மங்கள் செய்யப்பட வேண்டும்.

ஒரு மத கால நோபின்போது ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவது இஸ்லாமியர்களின் கட்டாய கடமையாக கருதபடுகிறது .இவ்வாறு பிறருக்கு கொடுப்பதை அதிகமதிகமாக்கிய காரணத்தால் அல்லது ஈகையை வழியுறுத்துவதால் அதனை அடுத்து வரும் பெருநாளை 'ஈகைத் திருநாள்' என்ற பொருளோடு கொண்டாடப்படுகிறது.அந்தவகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் இந்த ஈகைத் திருநாள்.
இறைவனின் (அல்லாஹ்வின்) அன்பையும் பொருத்தத்தையும் நாடி ஒருமாத காலம் தமது அனைத்து சுகபோகங்ளையும் துறந்து அல்லது தியாகம் செய்து வாழ்ந்தார்களோ அதற்கான மகத்தான கூலி அந்த இறைவனிடமிருந்து கிடைக்கும் நாள்தான் இந்த நோன்புப் பெருநாளாகும்.
அதாவது இறைவன் தன் நல்லடியார்க்கு நரக விடுதலை அல்லது சுவர்க்கம் வழங்கும் தினமுமாகும்.
முஸ்லிம்களைப் பொருத்தவரை உலகவாழ்க்கை போலியானது என்றும் உண்மை வாழ்வு மரணத்தின் பின் உள்ளது என்றும் ஏற்றுக் கொள்கின்றனர். எனவே மரணத்தின் பின் உள்ள வாழ்வு சுவர்க்கமாக இருக்க வேண்டும் என்பதனால் நோற்ற நோன்புக்குக் கூலி வழங்கும் இந்நாள் நிச்சயம் அது பெருநாள்தானே
அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் .


Comments

Thank you for commenting!
(within the last minute) Ilakuvanar Thiruvalluvan said:
நோன்புப் பெருநாள் என்பதை ஈகைத்திருநாள் எனப் பிற இதழ்கள் குறிப்பிட்டுள்ளது போல் இங்கும் தவறாகக் குறிக்கப் பெற்றுள்ளது. பக்ரீத் பண்டிகைதான் ஈகைத்திருநாள் என அழைக்கப்படுகிறது. உள்ளடக்கத்தில் குறிப்பிட்டாற்போன்று நோன்பு நாள்களின் நிறைவுநாள் நோன்புப் பெருநாள் எனப்படுவதே சரியாகும். ஈகை என்பது எல்லா நாள்களிலும் வலியுறுத்தப்பட்டாலும் பக்ரீத் பண்டிகை அதனை இன்றியமையாக் கடமையாகக் கொண்டுள்ளதால் ஈகைத் திருநாள் எனப்படுகிறது.
http://natpu.in/Pakudhikal/Nam%20Samookam/ramzanvazlthu.php#HCB_comment_box
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(3 days ago) Abdul said: who is the author?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக