வியாழன், 16 செப்டம்பர், 2010

தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர் அமிதாப் பச்சன்


புதுதில்லி, செப்.15- 2009-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று தில்லியில் அறிவிக்கப்பட்டது. இதில், சிறந்த நடிகருக்கான விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
"பா" இந்திப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
சிறந்த நடிகையாக "அபோஹமான்" படத்தில் நடித்த வங்காள மொழி நடிகை அனன்யா சாட்டர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
"அபோஹமான்"  படத்தை இயக்கிய ரிடுபர்னோ கோஷ் சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது "த்ரீ இடியட்ஸ்" இந்தி திரைப்படத்திற்கு வழங்கப்படுகிறது.
சிறந்த படமாக "குட்டி சரங்கு" என்னும் மலையாளப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
"பழசிராஜா" மலையாளத் திரைப்படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது.
"பசங்க" திரைப்படம் சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த வசனகர்த்தா விருது அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் பெறுகிறார். சிறந்த குழந்தை நட்சத்திர விருது பசங்க படத்தில் நடித்த ஜீவா, அன்புக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

 
கருத்துக்கள்

தமிழ் விருதாளர்கள‌ை முதன்மைப் படுத்தும் வகையில் செய்தித் தலைப்பை அமைக்கலாமே! அப்பொழுதுதான் செய்தியில் கூடுதல் ஈர்ப்பு ஏற்படும். எனினும் விருதாளர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/16/2010 2:32:00 AM
well done mr.pandiraj and mr.sasikumar. my heartiest for both of you. keepup the good work.
By asokan
9/15/2010 11:27:00 PM
இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்! தமிழ் படங்களின் இசை/பாடல்கள் சென்றுகொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் மலையாளப் படத்திற்கு இசையமைத்து விருதுவாங்கியதில் அர்த்தம் உள்ளது. வாழ்க பல்லாண்டு.
By இசைப்பிரியன்
9/15/2010 10:53:00 PM
How about Rajni in Sivaaji or Chandamuki? What a shame for his style. I didn't see his son in law, Thanush, in the last tow functions of Enthiran vizhas. Any Ladaai between Thanush and Ishwarya? Thanush is non-Brahmin and Aswin is a Brahmin(second son-in-law).
By Karuthu Kanniah
9/15/2010 10:46:00 PM
முக பேரன் 'நடித்த' படத்தை இலவசமாக டைரெக்ட் பண்ணியபிறகும் அவார்டு கிடைக்காமல் இருக்குமா? பாண்டிராசுக்கு வாழ்த்துக்கள். குழந்தைகளுக்கு ஆசிகள். தயாரிப்பாளர் சசிகுமாரின் தைரியத்துக்கு சபாஷ்!இந்தக் கதையை முதலில் படமாக்க மறுத்த 12 தயாரிப்பாளர்களுக்கு??
By Guru
9/15/2010 10:19:00 PM
தேச பாதுகாப்பு,ஊழல் ஒழிப்பு இதை சிறப்பாக செய்பவருக்கு விருது கொடுப்பது மட்டுமே அரசு செய்ய வேண்டும்.சினிமாவுக்கு விருது கொடுக்க தனியார் நிறுவனங்கள் இருக்கும் போது அரசுக்கு இது தேவை இல்லாத வேலை.
By Kalanithi
9/15/2010 10:19:00 PM
I am glad Mr.Ilaya raja has got the best music director. He has been the best music director for more than 3 decades. It is highly improper to equate any other person with him. May God Bless him.
By murugan
9/15/2010 7:53:00 PM
There is no meaning in giving awards to these senior artists.Senior artists should decline to get these awards on their own. Will they do? No! These guys would like to be in light until they are unable to walk!
By ankandasamy
9/15/2010 7:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக