தற்போதைய செய்திகள்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே லட்சியம்: ஜெயலலிதா
First Published : 14 Sep 2010 12:28:55 PM IST
சென்னை, செப்.14: மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களுக்கு நல்ல விலை உண்டு என்ற நிலையை உருவாக்கிய முதல்வர் கருணாநிதி அரசை வீ்ட்டுக்கு அனுப்புவதே அண்ணா 102-வது பிறந்தநாளில் ஏற்கும் சபதம் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எண்ணிலடங்கா திறமைகளை தன்னில் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் 102-ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்வு கொள்கிறோம். மொழி, இலக்கியம், இனம், பண்பாடு ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்காக தன் வாழ்நாளை மிச்சமில்லாமல் அர்ப்பணித்தவர் அண்ணா. 1967-ல் அரியணையில் அமர்ந்த அடுத்த ஆண்டே 1968-ல் உலகத் தமிழ் மாநாட்டை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்வோடு பங்குபெறும் வண்ணம் நடத்திக் காட்டினார். ஸ்ரீ, ஸ்ரீமான், ஸ்ரீமதி, குமாரி என்னும் வடமொழிச் சொற்களுக்கு முற்றாக விடை கொடுத்து, திரு, திருமதி, செல்வி என்னும் அழகு தமிழ்ச் சொற்களை அரசு மடல்களில், ஆவணங்களில் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கினார். இந்த மாநிலத்திற்கு `தமிழ்நாடு' என்று பெயர் சூட்டி, சங்கரலிங்கனார் போன்ற தியாகிகளின் கனவுகளுக்கு உயிர் கொடுத்தார். மாற்றுக் கருத்து கொண்டோரை நாராச நடையில் பேசி, நான், நீ என்று விளிக்கும் நாலாந்தரப் பேச்சாளராய் இல்லாமல், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று எதிர்ப்போரின் கருத்தையும் ஏற்று பரிசீலிக்கும் பரந்த உள்ளம் கொண்டவராக அண்ணா திகழ்ந்தார். இப்படி, பெருந்தன்மைகளின் உச்சமாய் வாழ்ந்த அண்ணாவின் அரசியல் குருகுலத்தில் பண்பாடு கற்றுக்கொண்ட நல்ல மாணவராக எம்.ஜி.ஆர். உருவானார். தனது மாட்சிமை மிக்க தலைவரான பெரியாரின்பால் அன்பு கொண்டிருந்த அண்ணா, எப்படி தலைவர் இருக்கையை அவருக்காகவே கடைசி வரையிலும் ஒதுக்கி வைத்திருந்தாரோ, அது போலவே எம்.ஜி.ஆரும் தலைவர் இருக்கையை தான் நிரப்பிக் கொள்ளாமல், பொதுச் செயலாளர் பதவியையே ஏற்றுக் கொண்டார். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் வழியிலேயே பெரியாருக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இருக்கையை இன்றும் ஆக்கிரமித்துக் கொள்ளாமல், அவர்கள் வழியிலேயே நானும் அரசியல் பணிகளை செய்து வருகிறேன். ஒழுக்கம் போதிக்கும் உயரிய பள்ளியிலும் மோசமான மாணவர்கள் நுழைந்துவிடுவது போல, அண்ணாவின் அரசியல் குருகுலத்தில் பயின்றாலும், அவரது விருப்பத்திற்கு மாறாக அரியணையை ஆக்கிரமித்துக் கொண்டதோடு, பேரறிஞர் அண்ணா, பெரியாருக்கு ஒதுக்கி வைத்த இருக்கையையும் தனதாக்கி, ஆக்கிரமித்து; கழகத்தை குடும்பமாக நேசிக்க வேண்டும் என்ற அண்ணாவின் பண்பாட்டை எதிர்மறையாக எடுத்துக்கொண்டு, தனது கோபாலபுரக் குடும்பத்தையே கட்சியிலும், அரசியலிலும், அதிகாரங்களிலும் திணித்து, ஆக்கிரமித்து; அண்ணாவின் விருப்பத்திற்கு மாறாக நடந்து வருபவர் கருணாநிதி என்பதை இத்தருணத்தில் நினைத்து வருத்தப்பட்டுத் தான் ஆக வேண்டும். இன்று அண்ணா உயிரோடு இருந்திருந்தால், "ஏ மிகத் தாழ்ந்த தமிழகமே" என்று விளித்து, வருந்தியிருப்பார். எழுத்தில் அடக்கிட முடியா அவலங்களால் தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தை, அதிகார வெறிபிடித்த கருணாநிதி குடும்பத்திடமிருந்து மீட்பது ஒன்று தான் அண்ணாவுக்கு நாம் சேர்க்கும் பெருமையாகும். அதற்காக இந்நாளில் உறுதி ஏற்போம். கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்னும் பேரறிஞர் அண்ணாவின் தாரக மந்திரத்திற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி; `ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்பதை, "என் குடும்பத்தின் சிரிப்பில் குதூகலத்தைக் காண்போம்" என்று உருமாற்றி; `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்பதை, "மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு நல்ல விலை உண்டு" என்ற நிலையை உருவாக்கி; அநாகரீக அரசியலின் உச்சம் தொட்டுவிட்ட கருணாநிதி அரசை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே, அண்ணா 102-ஆவது பிறந்த நாளில் நாம் ஏற்கும் சபதமாக இருந்திடல் வேண்டும் என ஜெயலலிதா, அண்ணா பிறந்தநாளில் செய்திவிடுத்துள்ளார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/14/2010 5:26:00 PM
9/14/2010 5:26:00 PM


By Pasumpon, Pandia Nadu
9/14/2010 5:08:00 PM
9/14/2010 5:08:00 PM


By Divya Tamil
9/14/2010 5:08:00 PM
9/14/2010 5:08:00 PM


By samela
9/14/2010 4:52:00 PM
9/14/2010 4:52:00 PM


By rajasji
9/14/2010 4:50:00 PM
9/14/2010 4:50:00 PM


By samela
9/14/2010 4:49:00 PM
9/14/2010 4:49:00 PM


By ankandasamy
9/14/2010 4:17:00 PM
9/14/2010 4:17:00 PM


By தமிழச்சி தங்கபாண்டியன்
9/14/2010 3:59:00 PM
9/14/2010 3:59:00 PM


By arumugam
9/14/2010 3:54:00 PM
9/14/2010 3:54:00 PM


By su. sathiya arunachalam
9/14/2010 3:51:00 PM
9/14/2010 3:51:00 PM


By ssk
9/14/2010 3:44:00 PM
9/14/2010 3:44:00 PM


By rajaasji
9/14/2010 3:41:00 PM
9/14/2010 3:41:00 PM


By kumar
9/14/2010 3:38:00 PM
9/14/2010 3:38:00 PM


By இந்திய நேசன்
9/14/2010 3:34:00 PM
9/14/2010 3:34:00 PM


By Ganapathy, Trichy
9/14/2010 3:04:00 PM
9/14/2010 3:04:00 PM


By ram
9/14/2010 2:48:00 PM
9/14/2010 2:48:00 PM


By pasumpon.somasundaram
9/14/2010 2:36:00 PM
9/14/2010 2:36:00 PM


By yuvaraj
9/14/2010 2:26:00 PM
9/14/2010 2:26:00 PM


By yuvaraj
9/14/2010 2:24:00 PM
9/14/2010 2:24:00 PM


By yuvaraj
9/14/2010 2:23:00 PM
9/14/2010 2:23:00 PM


By yuvaraj
9/14/2010 2:21:00 PM
9/14/2010 2:21:00 PM


By yuvaraj
9/14/2010 2:20:00 PM
9/14/2010 2:20:00 PM


By rajasji
9/14/2010 2:14:00 PM
9/14/2010 2:14:00 PM


By pugazhendhi
9/14/2010 2:12:00 PM
9/14/2010 2:12:00 PM


By Pasumpon, Pandia Nadu
9/14/2010 1:40:00 PM
9/14/2010 1:40:00 PM


By Pasumpon, Pandia Nadu
9/14/2010 1:37:00 PM
9/14/2010 1:37:00 PM


By dravidan
9/14/2010 1:37:00 PM
9/14/2010 1:37:00 PM


By SENBAGAM
9/14/2010 1:25:00 PM
9/14/2010 1:25:00 PM


By AL. Arumugam , S'pore
9/14/2010 1:24:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/14/2010 1:24:00 PM