தனிமனிதர் எவரும் தமிழைவிட பெரியவரில்லை: நிதியமைச்சர் க. அன்பழகன் பேச்சு
First Published : 12 Sep 2010 11:56:46 AM IST
புதுக்கோட்டை, செப். 11: தனிமனிதர் எவரும் தமிழைவிட பெரியவரில்லை என்றார் நிதியமைச்சர் க. அன்பழகன். புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு திமுக இலக்கிய அணிச் செயலரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரா.சு. கவிதைப்பித்தனின் கவிதை நூலை வெளியிட்டு மேலும் அவர் பேசியது: ""மொழிகளுக்கு எல்லாம் ஆதிமொழியாக தமிழ் திகழ்கிறது. வடமொழியிலிருந்தே மொழிகள் பிறந்தன என்றும் வடமொழியின் துணையின்றி தமிழ் மொழி இயங்காது என்றும் கூறப்பட்ட பொய், புரட்டுகளையெல்லாம் பொய்யாக்கி, தமிழ் மொழி தனித்தியங்கும் வலிமையுடையது என மொழி அறிஞர்கள் நிரூபித்ததால் இன்று செம்மொழியாகத் திகழ்கிறது தமிழ். தனி மனிதர் எவரும் தமிழைவிட பெரியவரில்லை. நாமெல்லாம் தமிழன் என்ற பெருமையையும் திராவிடன் என்ற உணர்வையும் கட்டிக் காக்க வேண்டும். தற்காலக் கவிதைகளைப் படிக்க முடிவதில்லை: கவிதைகளை விரும்பிப் படிப்பவன் நான். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படிக்கும்போது ஒரு வரியைக்கூட விட முடியாது. ஆனால், தற்போது வெளிவரும் கவிதைகள் அப்படி இல்லை. நாலு வரி படித்தால் அதற்கு மேல் படிக்க முடிவதில்லை. சிறப்புமிக்க ஒரு மொழியை நாம் பெற்றுள்ளோம். அதைக் கையாளும்போது வரலாற்று பிரக்ஞை தேவை. மொழியால் வாழும் கவிஞர்களுக்கு, தங்கள் கவிதைகள் மூலமாக சமுதாயத்தைச் சீர்திருத்தும் ஆற்றல் தேவை. கவிஞர்கள் எண்ணத்தில் உதிக்கும் கருத்துகள் நல்லவையாக இருந்தால் அவை மக்களை நல்வழிப்படுத்தும். எதிர்மறையாக இருந்தால், கவிதையும் தடம் புரளும்; அதைப் படைத்தவரும் நிலைக்க முடியாமல் காலத்தால் அடித்துச் செல்லப்படுவார். இதை உணர்ந்து கவிஞர்கள் செயல்பட வேண்டும்'' என்றார் அன்பழகன். முன்னதாக கவிதை நூலை அவர் வெளியிட, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் பெற்றுக்கொண்டார். விழாவுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி தலைமை வகித்தார்.
கருத்துக்கள்


By சிங்களன்
9/12/2010 11:55:00 PM
9/12/2010 11:55:00 PM


By K.Thirumalairajan
9/12/2010 8:27:00 PM
9/12/2010 8:27:00 PM


By Unmai
9/12/2010 5:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
9/12/2010 5:05:00 PM