புதன், 15 செப்டம்பர், 2010

விசித்திர உலகம்..

செயற்கை கடற்கரை

செயற்கையாக நீச்சல் குளம் அமைப்பது சாதாரணம்தான். ஆனால், செயற்கை கடற்கரை? ஜப்பானில் செய்து காட்டியிருக்கிறார்கள் அந்த அதிசயத்தை. முழுக்க முழுக்க இண்டோரில் அமைக்கப்பட்ட கடற்கரை இது. வெயில் காலத்தில் மட்டும் கூரையைத் திறந்துவிட்டு வெயிலை வர விடுவார்களாம். மழைக் காலத்தில் கண்ணாடிக் கூரையால் மூடி விடுவார்கள். செயற்கை விளக்குகளால் தகதகவென மின்னும் கடற்கரை. வெளியே என்ன வெப்பநிலை இருந்தாலும் உள்ளே ஒரே வெப்பநிலை இருக்குமாறு ஏர் கண்டிஷனர் பார்த்துக் கொள்கிறது.

வடிகட்டப்பட்ட சுத்தமான தண்ணீர் கடல் நீராக அலைமோதும். கொட்டிக் கிடக்கும் மணலும் செயற்கைதான். தொடுவதற்கு மணல் போலவே இருந்தாலும் இது உடலில் கொஞ்சம் கூட ஒட்டாதாம். ஏகப்பட்ட நவீனக் கருவிகள் கொண்டு வெயில் காலக் கடற்கரை மாதிரியே வருடம் முழுவதும் இதைப் பாதுகாக்கிறார்களாம்.

அங்கே போனால் செயற்கை சுண்டல் தருவாங்களோ?!

- எஸ்.யமுனா, கும்பகோணம்
 
தேவதை  , சூலை 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக