சனி, 18 செப்டம்பர், 2010

இலங்கை மீதான போர்க்குற்றப் புகார்: ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு விசாரணை துவக்கம்


வாஷிங்டன், செப்.17: இலங்கை மீதான போர்க்குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு விசாரணையைத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு இலங்கையிலுள்ள முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க நிபுணர் குழுவை ஐக்கிய நாடுகள் சபை அமைத்தது.ஆனால் நிபுணர் குழு இலங்கை வந்து விசாரணை நடத்துவதற்கு இலங்கை அனுமதி மறுத்தது. இந்த நிலையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழு அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேசியது. இதைத் தொடர்ந்து தங்களது விசாரணைப் பணிகளை குழுவினர் துவக்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாள்ர் மார்ட்டின் நேசிர்க்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில் இலங்கை வரும்போது குழுவினருக்கு விசா அளிக்க மாட்டோம் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் காமினி லட்சுமண் பெரிஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

விரைவில் விசாரணையை நடுநிலையுடன் முடித்து இலங்கையிலும் இந்தியா முதலான பிற நாடுகளிலும் உள்ள போர்க்குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கட்டும். எந்த ஒரு நாட்டிலும் இனிப் போர்க்குற்றங்கள் நடைபெறா வண்ணம் தண்டனை அமையட்டும்! அறம் வெல்க! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 3:10:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக