பொம்மைப் பதவிகள் தேவையில்லை: ஈவிகேஎஸ்.இளங்கோவன்
First Published : 17 Sep 2010 12:20:00 AM IST
வாக்குச்சாவடி குழு உறுப்பினர் படிவத்தினை கட்சியினரிடம் வழங்கினார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன். உடன், எம்எல்ஏ ஆர்எம்.பழனிச்சாமி மற்
ஈரோடு, செப். 16: எந்த அதிகாரமும் இல்லாத தலையாட்டிப் பொம்மைப் பதவிகள் காங்கிரஸôருக்குத் தேவையில்லை என்று மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார். மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் குறித்த விவரப் படிவங்களை எம்எல்ஏ ஆர்எம்.பழனிச்சாமி, இளங்கோவனிடம் ஈரோட்டில் வியாழக்கிழமை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியது:தமிழகத்திலேயே மொடக்குறிச்சி தொகுதியில்தான் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடிதோறும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் மக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.புதிய தலைவர் - தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை சோனியாகாந்தி விரைவில் நியமனம் செய்யவுள்ளார். பின்னர் அனைத்து சட்டப் பேரவை தொகுதிகளிலும் இதுபோன்ற குழுவை அமைக்க வேண்டும் என்று புதிய தலைவரிடம் வலியுறுத்தப்படும்.மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பல பகுதிகளில் உரிய கூலி தரப்படுவதில்லை என்று புகார் தெரிவித்திருந்தேன். இதற்கு முதல்வர் அல்லது தலைமைச் செயலரிடரிமிருந்து வரும் பதிலே சரியானதாக இருக்க முடியும். ஆனால் முன்னாள் அமைச்சர் என்கேகே.பெரியசாமி, இத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை எனவும், கடந்த 1980-ல் ஏற்பட்டது போன்ற நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். அவருக்கு, நான் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.அதிகாரம் இல்லை - இளங்கோவனைக் கட்சியில் இருந்து நீக்குவேன் என்று சொல்லவில்லை என தங்கபாலு தெரிவித்துள்ளார். இதனால் அவர் குறித்தும் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அதேசமயத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தங்கபாலுக்கு எந்த அதிகாரமும் இல்லை.நூல் விலை உயர்வு பிரச்னையைப் பொருத்தமட்டில், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களைப் பாதிக்காத முடிவையே எதிர்பார்க்கிறேன். கூட்டணியில் புதிய கட்சிகளைச் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அண்மையில் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள தென்னை நலவாரியப் பொறுப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டவில்லை.பொம்மைப் பதவிகள் - குமரிஅனந்தன் தலைவராக உள்ள பனைத் தொழிலாளர் நல வாரியத்தில், முக்கிய முடிவுகள் அனைத்தையும் அதிகாரிகளே எடுக்கின்றனர். எந்த அதிகாரமும் இல்லாத தலையாட்டி பொம்மைப் பதவிகள் காங்கிரஸ் தலைவர்களுக்குத் தேவையில்லை.தேர்தல் கூட்டணி குறித்து சோனியா காந்தி முடிவு செய்வார். சட்டப்பேரவைத் தேர்தலில் 110 தொகுதிகளையும், ஆட்சியில் பங்கும் கூட்டணிக் கட்சியிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவோம் என்றார் இளங்கோவன். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாகவும் இளங்கோவன் கூறினார்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2010 2:44:00 AM
9/17/2010 2:44:00 AM


By Sasikala
9/17/2010 2:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 9/17/2010 2:16:00 AM