சென்னை, செப். 16: ஓய்வூதியம் மற்றும் வைப்பு நிதி தொடர்பான தகவல்களை அறிய எஸ்.எம்.எஸ். சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியான செய்தி: ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முதிர்வு விண்ணப்பங்கள் அவரவர் பணிபுரிந்த அலுவலகங்களிலிருந்து அனுப்பப்படும். மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்துக்கு அந்த விண்ணப்பங்கள் வந்து சேர்ந்த பின், அது பற்றிய விவரங்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பங்களின் இப்போதைய நிலை குறித்த தகவல்களையும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஒருவர் தனது பொது வருங்கால வைப்பு நிதி முதிர்வு விண்ணப்பம் குறித்த நிலையை தெரிந்து கொள்ள, அவரது வைப்பு நிதி எண் AGRI 1234, அவரது பிறந்த தேதி 16.02.1945 எனில், அவர் AG GPF AGRI 1234 16021945 என டைப் செய்து, 9962117777 என்ற கைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். ஓய்வூதிய விண்ணப்பம் குறித்த நிலை அறிந்து கொள்ள, ஒருவரது ஓய்வூதிய விண்ணப்ப எண் 12345678 எனில், AG PEN 12345678 என டைப் செய்து, அதே கைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்பும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு தேவையான தகவல்கள் உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
இத்தகைய திட்டம் எல்லாம் வெறும் கண்துடைப்பு அறிவிப்பாக இருக்கின்றதேயன்றி நடைமுறையில் இல்லை. சான்றாக இணையம் வழியாக ஓய்வூதிய நிலைப்பாட்டை அறிந்து கொள்ளலாம் என உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் ஆய்வில் உள்ளதாகத்தான் வருமே தவிர உண்மை நிலை வராது. இங்கு என்றில்ல எல்லா இடத்திலும் இதே நிலைதான். சான்றாகக் கடவுச் சீட்டு நிலையறிய முயன்றால் எப்பொழுதுமே காவல்துறை அறிக்கை எதிர்பார்க்கப்படுவதாகத்தான் செயதி வரும்.எனவே, அன்றாடம் புதுப்பிக்கப்பட்டு உண்மையிலேயே நடைமுறைப் படுத்தாமல் பெயரளவிற்குச் செய்தியை வெளியிட்டுப் பயன் என்ன?
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2010 3:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 9/17/2010 3:06:00 AM