சென்னை : ''முதல்வர் கருணாநிதி விரும்பினால், அமைச்சர் பதவியை துறக்க தயார்,'' என மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.
முதல்வர் கருணாநிதிக்கு இணையான திறமை, கட்சியில் வேறு யாருக்கும் கிடையாது. தி.மு.க., தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தினால், அதில் நிச்சயம் போட்டியிடுவேன். மத்திய அமைச்சர் அழகிரியின், சமீபத்திய இதுபோன்ற பேச்சுக்கள் தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் ஒரு விழாவில் பங்கேற்ற அழகிரி, நிருபர்களிடம் கூறும் போது, 'என் தந்தையும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரும்பினால், எனது மத்திய அமைச்சர் பதவியை கனிமொழிக்காக விட்டுக் கொடுக்க தயாராக உள்ளேன். ஆனால், கனிமொழிக்காக பதவியில் இருந்து விலகுவேன் என யார் சொன்னது? இதுகுறித்து கருணாநிதி, சோனியாவை சந்திக்க இருந்தாரா? என்பது எனக்குத் தெரியாது. இந்த கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும்' என்றார்.
|
வாசகர் கருத்து |
|
''The Only One Women who can able to do well and good Administration in Tamilnadu..as well India... Ms. J Jayalalitha Only... No body else in the world..i am 100% sure..'' but without Sasikala & group. If they interfere, Jayalalitha is the worst Chief Minister in Tamilnadu. Jayalalitha is the best & Sasikala is the worst. |
by china chittukuruvi,delhi,India 16-04-2010 18:37:06 IST |
தென்னரசு... என்ன கனவு கினவு காணலையே.. . பா ம க தேவலையா... யாரோ ஒருத்தர் மேடைக்கு மேடை.. என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் கட்சியிலோ, ஆட்சியிலோ பதவிக்கு வர மாட்டார்கள். அப்படி வந்தால் என்னை நாடு ரோட்டில் வைத்து சாட்டையால் அடியுங்கள் என்றார். மேலும் என் கட்சியினை சேர்ந்தவர்கள் யாரும் லஞ்சம் வாங்கமாட்டார்கள். அப்படி செய்தால் அவர்களை முச்சந்தியில் நிற்க வைத்து சாட்டையால் அடியுங்கள் என்றாராம்... அவர் தனது மகனுக்கு பின் வாசல் வழியாக எம்பி பதவி கிடைக்குதுன்ன உடனே நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வேட்டியை துவைக்க போனாராம். அதோட அவருக்கு மத்தய மந்திரி பதவியையும் வாங்கி கொடுத்து உலக தரம் வாய்ந்த டெல்லி மருத்துவ மனையையும், அதன் தலைமை மருத்துவரையும் அசிங்கப் படுத்துவது, புதுச்சேரி மருத்துவ மனையை தன பெயரில் எழுதி வாங்க முயச்சித்தது என்று மருத்துவ துறையை கொள்ளை அடிக்க முயர்ச்சித்தாராம்.. இப்பவும் தன் மகனுக்கு எம்பி பதவி கிடைக்குமான்னு நாக்க தொங்கப் போட்டுண்டு இருக்காராம்.... போய்யா... போயி அவரோட அக்கிரமத்த பாரு. |
by H நாராயணன்,hyderabad,India 16-04-2010 18:18:36 IST |
i agree with சேகர் |
by Balaji,chennai,India 16-04-2010 18:03:15 IST |
நண்பர்களே நீங்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொண்டிருங்கள் கலைஞருக்குப்பின் தளபதி மு.க .ஸ்டாலின் தலைமையில் தி .மு .க .நல்லாட்சி தொடரும் . |
by i santha,tiruvallur,India 16-04-2010 17:58:25 IST |
''அழகிரி தனி திறமை படைத்தவர். தி மு க தலைமை ஏற்றாலும்,தமிழகம் வந்து,தனி அமைப்பு ஏற்படுத்தினாலும்,வெற்றி பெறுவார்.'' - best comedy of this year |
by P பழனிகுமார்,Madurai,India 16-04-2010 17:53:53 IST |
சாதாரண உதவியாளர் வேலைக்கு ஆயிரத்தெட்டு தகுதிகளை கேக்கும் அரசாங்கத்தில், மடையர்களையும் மந்திரியாக்க முடிகிற வெக்கங்கெட்ட ஜனநாயகம் இருக்கும் வரை என்னவேணுமின்னாலும் பேசலாம். சாதிக்கலாம். |
by p பாலா,Shanghai,India 16-04-2010 17:47:55 IST |
மக்கள் திருந்த வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. |
by V பிரபு,chennai,India 16-04-2010 17:07:43 IST |
யாரை சொல்லியும் குற்றமில்லை. காசை வாங்கிகொண்டால் கண்டவருக்கும் ஓட்டு போடலாம் என தமிழன் தயாராக இருக்கிறானே. |
by தமிழன் ,chennai,India 16-04-2010 16:53:11 IST |
If Mr.Alagiri wanted to sacrifice his minister post for Ms.Kanimozhi means the useless central governement has no power to decide their own ministry and control MK's octobus family. I requset Ms. Soniaji to dissove TN congress and ask all congressmen to join MK's family company. Shame on you MK and Conressmen. |
by A Pandi,Singapore,Singapore 16-04-2010 16:46:39 IST |
என்னது நீ மத்திய அமைச்சரா ? உன்ன இதுவரைக்கும் பார்லிமெண்டுல பார்த்ததே கிடையாதே |
by c chidambaram,Chennai,India 16-04-2010 16:31:51 IST |
DONT FORGET THAT YOU HAVE COME TO THIS POSITION BECAUSE OF THE PEOPLE THOSE WHO HAVE CASTED THE VOTES .ANY HOW,SINCE YOU GOT THE MAJORITY ONLY YOU ARE ABLE TO BECOME THE MINISTER. |
by V.S. SARATH,DUBAI,UnitedArabEmirates 16-04-2010 16:20:53 IST |
மக்களே .இவைகள் அனைத்தும் நாடகங்களே .நம்பாதிர்கள் .பைசா பிரயோஜனம் இல்லை நமக்கு .நமக்கு பிரச்சனைகள் நிறைய உள்ளது .வரும் சட்ட சபை தேர்தல் வரை இந்த நாடகம் நடக்கும் .நாம் பொதுவாகவே அடுத்த வீட்டு பிரச்சனை தெரு சண்டை இவைகளை வேடிக்கை பார்க்கும் குணம் இயற்கையாகவே வந்து விட்டது .அந்த குணத்தையும் ,மறதியையும் பயன் படுத்துகிறார்கள் . உஷார் உஷார் உஷார் |
by sumba sumban,chennai,India 16-04-2010 16:16:34 IST |
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை .. கலக்கு அழகிரி .. கலக்கு.. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்க குடும்பம் தான் தமிழ் நாட்டை அழ வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை |
by ராஜா ,bangalore,India 16-04-2010 16:13:18 IST |
A small correction in mokkasamy's comment. The Only One Women who can able to do well and good Administration in Tamilnadu..as well India... Ms. J Jayalalitha Only... No body else in the world..i am 100% sure.. It should 200% sure rather than 100%. |
by S Duraisamy,Bangalore,India 16-04-2010 16:02:57 IST |
அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வரும் கால அரசியல்வாதிகள். இவர்களில் போலீஸ்டேஷன் போகாத யோக்கியன் எத்தனை பேர் ? |
by கலைஅரசன்:சவுத்africca ,thamilnaduthanjavuor,India 16-04-2010 15:10:53 IST |
இந்த டிராமா கருணாநதி மூளை next சென்ட்ரல் மினிஸ்டர் ம.கே.கனிமொழி |
by R.K. KOLANCHIYAPPAN,Tirupur.,India 16-04-2010 15:00:40 IST |
'வெரி குட்' அண்ணா? அழகிரி |
by S Mariappn ,KINGDOMOFSAUDIARABIA,India 16-04-2010 14:27:33 IST |
நான் ஒரு தி.மு.க காரன் என்று சொல்ல வெட்கமாக உள்ளது |
by bhe ezhil,abudhabi,India 16-04-2010 14:00:03 IST |
'கருணாநிதி சிறந்த முதல் மந்திரி அல்ல, மிகச்சிறந்த குடும்ப முதல்வர். தமிழ்நாட்டு மக்கள் மடையர்கள் அல்ல !!! ' |
by thirugnanam,chennai,India 16-04-2010 13:52:02 IST |
அய்யா கட்சியில் ஸ்டாலின் மட்டும் சாதாரண உறுப்பினர் இருந்து ஓவ்வொரு நிலைப்பாட்டில் இருந்தும் கட்சியில் உழைத்து முன்னுக்கு வந்தவர்.மற்றவர்கள் கலைஞர் பிள்ளைகள் என்ற முகவரியில் அரசியல் நடத்த வந்தவர்கள். குறிப்பாக கலைஞர் பின் கட்சியை வழி நடத்த தகுதியானவர் ஸ்டாலின் மட்டும் தான் சிறந்தவர். அழகிரி எந்த துணிச்சலில் தலைவருக்கு போட்டி போட்டிருக்கிறார், போடபோகிறார். கட்சி நல்ல அமைப்பு. மிசா காலத்தில் தொண்டர்களுடன் உள்ளே இருந்த காலத்தில், ஸ்டாலின் அடியை தாங்கி கொண்டார். சிட்டிபாவு உள்ளே இருந்து வெளிய வந்த சிறிது நாளில் மரணம் அடைந்தர். எப்படி பார்த்தாலும் ஸ்டாலின் மட்டும் தலைமை பொறுப்பில் சிறப்பானவர் நிச்சயம். இவர் வந்தால் நாடு உருப்படும் |
by s வெள்ளைசாமிMA,manapparai,India 16-04-2010 13:28:13 IST |
ஆடுங்க. அதுவும் சீல காலம் தான் |
by 99433 முத்து,tiruvrur,India 16-04-2010 13:12:00 IST |
உண்மையில் நீ அஞ்சா நெஞ்சன்னு நிருபிச்சுட்டா தலைவா. |
by N SILAMBARASAN,musiri,India 16-04-2010 13:06:22 IST |
எந்த அப்பா தன் மகன் பதவியில் இருப்பதை விரும்பாதவர் ?????????????????????????? |
by j ராசி,chennai,India 16-04-2010 12:55:08 IST |
முதல்வர் கருணாநிதி மகன் என்பதை தவிர வேறு தகுதி எதுவும் இல்லாதவர் அழகிரி. எனவே அய்யா கருணாநிதி தான் முடிவு செய்யவேண்டும். தி.மு.க. தொண்டன்... |
by r raja,Thirumangalam,India 16-04-2010 12:49:57 IST |
ஒன்று மட்டும் நிச்சயம் இவர்கள் பதவி ஆசையால் திமுக சிதற போவதை அந்த ஆண்டவனால் கூட தடுக்க முடியாது. எல்லாம் நன்மைக்கே. |
by A திருபுவன SUNDARI,uk,India 16-04-2010 12:44:36 IST |
Le him talk like this, it is good for tamilnadu. Vasu, UAE |
by Vasu,Dubai,India 16-04-2010 12:41:55 IST |
அன்பார்ந்த நண்பர்களே எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் எல்லா இடத்திலும் உள்ளது. நேரு, கலைஞர், மூபனர், ramdoss தேவகௌட, முலாயம் singh மற்றும் பல பேர் தன்னுடைய வரிசுகலையே கொண்டு வருகின்றனர். மக்களும் யார் நின்றால் என்ன ஓட்டுக்கு பணம் கொடு என்று வெட்கமில்லாமல் கிடக்கின்றனர். அனால் எதற்கும் ஒரு முடிவு உண்டு. அது இறைவன் கையில் இருக்கிறது. பொய் நம் வேலையை பார்போம் |
by m ஆபிரகாம்,chennai,India 16-04-2010 12:39:58 IST |
ஏம்பா, குடும்பம், குடும்பம்னு கத்துறீங்க, அவங்க எல்லாருமே கட்சியில பல வருஷமா இருக்காங்க. தகுதி இருக்கு வர்றாங்க. அதையும் மீறி அவன் கட்சியில இருக்குற மானமிகு தமிழனுங்க அதை ஏத்துக்கறாங்க. உங்களுக்கு என்ன வந்துது. முடிஞ்சா அவங்க எலெக்சன்ல நிக்கும்போது தோக்கடிக்க பாருங்க. வியாபாரத்துல குடும்பம் இருக்கலாம், அரசியல்ல இருக்க கூடாதா? வியாபாரத்துல காசு குடுத்தா வாங்கலாம், நியாயம் ஆனா அரசியல்ல குடுத்த தப்பா? என்னய்யா நியாயம் இது. படிக்காதவனுக்கும், போக்கிரிக்கும், பணத்துக்கும் வோட்டு போடும்போது தெரியனும். |
by k வெண்ண வெட்டி,chennai,Qatar 16-04-2010 12:36:06 IST |
இதெல்லாம் பொலிடிக்ஸ்ல சகஜம் அப்பா |
by b karthikeyan,dehradun,India 16-04-2010 12:19:20 IST |
ஹ.. ஹ.. ஹ.. சரியான கூத்து. குடும்பத்திற்கு உள்ளேயே எல்லா பதவிகளையும் பங்கு போட்டுகிட்டா கட்சியில் உழைத்தவனுக்கு பட்டை நாமமா....? |
by s ராமலிங்கம் ,mysore,India 16-04-2010 12:05:54 IST |
நமது தெருக்களில் சின்ன குழந்தைகள் கையில் முந்திரியை வைத்துக்கொண்டு பேசும் மழலை பேச்சு போல் உள்ளது.அப்பா சொன்னால் தங்கைக்கு கொடுப்பாராம். இவர் இப்படி இன்னொருவருக்கு கொடுப்பதற்க்காகதான் தான் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளை இது போன்ற மலிவு அரசியல்வாதிக்கு பதிவு செய்தார்களோ. |
by M Hanifa,Tirunelveli,India 16-04-2010 11:56:10 IST |
மு.க. குடும்பம் என்ற மரத்தில் பழுத்த பழம் மு.க.. மரத்தில் பூ, பிஞ்சிகளாய் இருக்கும் மு.க. வின் வாரிசுகளும் இந்த மானமுள்ள தமிழர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது மு.க. வின் கனவு. இது மு.க. வே சொன்னது. இதை சீர்குலைக்கும் எண்ணத்தில் யாராவது இருந்தால் அவர்களின் மனதை மாற்றி கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் முதல் கொண்டு அனைத்து சேவைகளும் செய்ய படைக்கப்பட்டதே மு.க. வின் குடும்பம். இனியும் நாம் அவர் மீது பாசம் கொண்டு அவரை வெறி கொண்டு ஆதரிப்போம் என்பதை வேதனையுடன் வேண்டி அழுது மன்றாடி தரையில் விழுந்து புரண்டு கேட்டுக்கொள்கிறேன். |
by K Sozhan,Villuppuram,India 16-04-2010 11:49:38 IST |
தமிழ் நாட்டு மக்கள் நினைத்தது நடக்கிறது. வாழ்த்துக்கள் |
by palani,abudhabi,UnitedArabEmirates 16-04-2010 11:35:58 IST |
டேய் திமுக தொண்டர்களே இன்னும் கொஞ்ச நாளில் 234 தொகுதி யிலும் கருணாநிதி மகன், மகள், பேரன், பேத்திகள் மட்டுமே போட்டி இடுவார்கள், தொண்டர்களே நீங்கள் அவர்களுக்கு கூஜா தூக்குங்கள். |
by r பாலா ,mayiladuthurai,India 16-04-2010 11:20:44 IST |
சண்டைனு வந்தா சட்டை கிழியதாய செய்யும்... சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு...?? நல்லா கேட்குராங்கயா டீடைலு .....தம்பி 2007 ல 3 பேரை உரு தெரியாம சிதைசுருகோம் நியாபகத்துல வைசுகொங்க...வேணாம் இதோட நிறுத்திக்குவோம்...தலைவர் பதவிய கொடுத்துட்டு வேல வெட்டிய பாருங்க தம்பி.... |
by m mannan,madurai,India 16-04-2010 11:19:15 IST |
கருணாநிதிக்கு வேற புள்ளைங்க ஏதும் இல்லையா, அவங்களுக்கும் மினிஸ்டர் பதவி கொடுக்க வேண்டியது தானே.நம்ம மக்கள் நினைச்சாங்க நா இவங்கள விரட்டி விடலாம், ம்ம் அது எப்போ தான் நடக்குமோ? |
by a chandran,singapore,India 16-04-2010 10:50:27 IST |
மானம் கெட்ட...மதி கெட்ட மக்கள் இருக்கும் வரை இப்படிப்பட்ட அரசியல்வதிகளுக்கு காலம் இருந்து கொண்டுதான் இருக்கும்...........மக்களே திருந்துங்கள்... |
by s புஷ்பாராகவன்,Chennai,India 16-04-2010 10:37:08 IST |
தி மு க வில் பகுத்தறிவு உள்ளவர்கள் (சுய சிந்தனை இல்லாதவர்கள்) இருக்கும் வரை இது போன்ற நாடகங்கள் நடை பெறும். ஏதோ கருணாநிதிக்கும் அவரது குடும்பத்துக்கும் தமிழ் நாடே அடிமை போல் இருக்கிறது இங்கே நடப்பதை பார்த்தால். |
by b raj,chennai,India 16-04-2010 10:36:47 IST |
என்ன கொடுமை சார் |
by R அன்பு, ஹாங் காங் ,Hongkong,HongKong 16-04-2010 10:33:47 IST |
குடும்ப அரசியல் ஒழிக |
by kk kkk,chennai,India 16-04-2010 10:27:59 IST |
What happened to Azhagiri ? Still he is not matured ? Like a small children he is talking ? Let him do his duties properly / sincerely in Delhi ? His brother Stalin is not speak loose talks . Now he is very much matured. Mr. Azhagiri, tomorrow what will happen ? Nobody knows. Dont spoil your image unncessaryly. |
by P RAVICHANDRAN,chennai,India 16-04-2010 09:46:39 IST |
ஒரு குடும்ப ஆட்சி ஒழியனும். பல சீனியர்கள் திமுகவில் முட்டாள்களாக ஆக்கப்பட்டு உள்ளனர். இதற்கு மெஜாரிட்டி ஜாதி அரசியல் (பாமக) பரவாயில்லை. |
by s தென்னரசு,tn,India 16-04-2010 09:43:26 IST |
நரேந்திர மோடி சொன்னது போல் 'இந்தியவில் இன்னும் மன்னர் ஆட்சி முறை ஒழியவில்லை ' In central its Nehru kingdom and in TN its Karunanathi Kingdom. |
by d ஆடலரசு,Coimbatore,India 16-04-2010 09:39:19 IST |
திமுகாவின் அழிவு காலம் ஆரம்பம் ஆகிவிட்டது. ஸ்டாலின் தவிர யார் தலைவராக வந்தாலும் திமுகாவை காப்பாற்ற முடியாது. தலைவர் பொறுப்பிற்கு சிறிதும் தகுதி இல்லாத அழகிரியால் தமிழ் நாட்டிற்க்கு ஆபத்து. |
by L ராசு,Bangalore,India 16-04-2010 09:33:32 IST |
அது என்னங்கடா எல்லாமே குடும்பத்த சுத்தியே வரீன்கே. கொஞ்ச நாள் வீரா, கொஞ்ச நாள் அன்புகிட்ட கொடுங்க பார்போம். எது எப்படியோ எங்க தமிழ் மக்களுக்கு ஆயிரம் ரூபா பணம், பிரியாணி, இலவச வேஷ்டி கொடுங்க அப்படியே இந்த கரிமேட்டு கருவாயனையும் கொஞ்சம் கவனிச்சா இந்த உலகமே உங்களுக்கு தான். நீங்க எதைபற்றியும் கவலைபடமா ஜாலியா இருங்க. |
by k மொக்கசாமி,maldives,Maldives 16-04-2010 09:26:29 IST |
வாக்குக்கு பணம் என்ற ஒரு வெட்ககேடான ஒரு கூத்தை நடைமுறை படுத்தி இந்தியாவின் மானத்தை குறிப்பாக தமிழகத்தின் மானத்தை TR பாலு வின் கப்பலில் ஏற்றிய பெருமை அருமை அண்ணனையே சேரும்.. இன்னும் என்ன வேண்டும் அவர்களுக்கு..அனைத்தையும் அனுபவித்து விட்டீர்களே... ஒரு சிறிய விண்ணப்பம் நீங்கள் (திமுக வையும் சேர்த்து) தமிழக மக்களுக்கு எதாவது நல்லது செய்ய விரும்பினால் ஒன்று மட்டும் செய்யுங்கள். அனைவரும் சுவிட்சர்லாந்த் சென்று ஒரு 50 வருடம் ஓய்வெடுங்கள்.. தமிழகத்தை Dr ஜெயலலிதா அவர்கள் ஆளட்டும்.. The Only One Women who can able to do well and good Administration in Tamilnadu..as well India... Ms. J Jayalalitha Only... No body else in the world..i am 100% sure.. |
by Bala,Bangalore,India 16-04-2010 09:20:49 IST |
அன்புள்ள மூனா கானா ஆனா அவர்களே!! நாங்கள் ஒரு வோட்டுக்கு 1000 ரூபாய் வாங்கி வாங்கி அழுத்து விட்டது..நீங்கள் ஒரு கட்சி ஆரம்பித்து ..election -ல நின்னு எங்களுக்கு லட்சம் லட்சமா கொடுங்கோ அண்ணா ...நீங்க தான் எங்கள் தலைவர்... ஸ்டாலின் கைல ஒரு பால் புட்டி கொடுத்து ...உங்க கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கிடுங்கோ அண்ணா please !! வாழ்க மதுரை மைனர்!! |
by பிரசாத்,Chicago,UnitedStates 16-04-2010 09:15:56 IST |
அண்ணன் அழகிரி இஸ் எ வெரி ஹானஸ்ட் மேன். அண்ணன் வெற்றி பெறுவார்........... அவர் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்........ |
by A vijay,nagapattinam,India 16-04-2010 09:13:48 IST |
solunga thaliva(kalaingar) kanimozhiya or alagiryara illai endral pudiyataga udyamagirathu AADMK(Anjaa Nenjan Diravida Munetra Kalagam) |
by k sathish,madurai,India 16-04-2010 09:08:39 IST |
He has never answered any questions as a Cabinet Minister. He is a total misfit for the post.Karunanidhi thinks that Tamil nadu is his property. Why should he wait for Karunanidhi's approval to quit his post at the Center? Is Karunanidhi the sole person to take the decision. Prime Minister Manmohan Singh should check this dead weight out by whatever means possible in the interest of India. Nor should he listen to Karunanidhi's pleas to accomodate Kanimozhi in the cabinet,The A.Raja - Kanimozhi nexus will prove much more dangerous in the light of Spectrum G2 scandal. |
by D Reddy,USA,UnitedStates 16-04-2010 09:00:24 IST |
கலைஞர் விரும்பினால் மத்திய மந்திரி பதவியை துறப்பாராம்... அப்படின்னா.. பிரதமர் என்பவர் எதற்கு? அவர் சொன்னாலும் இவர் கேட்க மாட்டாரா? கருணாநிதி ஒரு மாநில முதல்வர் மட்டுமே... மதிய அமைச்சர் என்பது மதுரை மாவட்டத்திற்கு மட்டுமோ... அல்லது தமிழகத்திற்கு மட்டுமோ சொந்தமானது அல்ல... மத்திய அரசு, பிரதமர் என்றால் இவர்களுக்கு இவ்வளவுதான் மரியாதை. அதுவும் இவர் பதவியை துறந்தால் அது கனிமொழிக்காக மட்டுமேவாம்... ஏன் பிரதமருக்கு இந்த பதவியை வேறு யாருக்கும் வழங்க அதிகாரம் இல்லையா... அது சரி.. திறமையை பார்த்து பதவி கொடுத்து இருந்தால் தானே இதன் அருமை தெரிந்தி ருக்கும். ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதற்காக கொடுக்கப் பட்ட பதவி அல்லவா இந்த மத்திய மந்திரி பதவி? கருணாநிதியின் குடும்பமே கழகம் என்பது போல, இவர்களே மத்திய மந்திரிகள் என்று சட்டம் வந்தாலும் வரும். பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். |
by H நாராயணன்,Hyderabad,India 16-04-2010 08:53:10 IST |
தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்குது இது இப்போது ரொம்ப முக்கியமா |
by a sathishkumar,chennai,India 16-04-2010 08:52:13 IST |
There are many things implied: 1) Karunanithi cannot control his son Alagiri. 2) Alagiri says everybody in DMK including Prof. Anbalakan and Stalin are unfit to become the leader of DMK except him. 3) But Alagiri expect everybody including Karunanithi should accept him as the leader of DMK. 4) Alagiri statement implies all DMK members and ministers are totally unfit but they should accept his leadership. 5) All the above are a CINEMA story screenplay written by Karunanithi. |
by S Balan,Seremban,Malaysia 16-04-2010 08:46:16 IST |
DMK avanga appan veettu soththu. Pangaalighal pangu pottuk kolla poghiraarghal. Tamilaga makkal vaayil viralai vaiththu chooppikkolvom. Aanaa onru DMK kku azhivu kaalam nerungi vittathu. Alagiri will wreck and destroy the party soon. Who is Kanimozhi to replace Alagiri? I am reminded of M R Radha's famous dialogue in Raththakkanneer whenever I read about her in newspapers and TV. |
by AV Arumugam,Chennai,India 16-04-2010 08:45:45 IST |
வாயா அழகிரி, பதவிய விட்டு கொடுக்க அது என்ன உங்க குடும்ப சொத்தா? தலைவர் விரும்பினால் தங்கச்சிக்கு விட்டு கொடுக்க அது ஒன்னும் கருணாநிதி குடும்பம் இல்லை! பார்லிமென்ட் & இந்தியன் கவர்மென்ட் பா மறந்துடாதீங்க. மம்ம்ம்ம் என்ன செய்ய இன்னும் என்னெல்லாம் கொடுமைய நாங்க அனுபவிக்க காத்திருக்கோமோ தெரியலை. |
by A கவண்டுமுருகன்,chennai,India 16-04-2010 08:33:16 IST |
Sir, More or less Karunanidhi family members have occupied the entire field. They can try to make an IPL team and own, that will make a huge money. |
by R. Tamilsangu,chennai,India 16-04-2010 07:53:27 IST |
ungal sandai edirkatchikku sadagama irukku ippo.jaya janaki sandaiyala dmk jayichuthu mgr ponapuram.stalin alagiri sandayala kalaigarayyaku appuram yarukko sadagama poyidapoguthu.neenga nalla seiyureenga.anna panam koduthu jayikkuradagavum jajannayaga vetri iylla ma seet pidykuratha makkal pesikuranga.idhu thevaya.win&sei.kumar |
by k kumar,chennai,India 16-04-2010 07:32:56 IST |
தமிழன் எல்லாரும் முட்டாளுங்க... அதனால தான் திமுக வுக்கு ஒட்டு போடறாணுக. |
by M வால்பையன்,MuttalTamilnadu,India 16-04-2010 07:32:44 IST |
இன்னுமொரு நாடகம், விரைவில் புதிய சட்ட சபை தேர்தல் அறிவிப்பு வரபோகிறதா தி மு க ? நாங்கள் உம்முடைய சன் டிவியிலிருந்து கலைஞர் டிவி உதயமான நாடகத்தை வெகு நாள் கழித்து புரிந்து கொண்டோம், இப்பொழுது மற்றுமொரு நாடகம், தமிழகம் இப்பொழுது ஒரு கூத்துகாரனின் குடு குடுப்பையில் அகப்பட்டு தவிக்கிறது, இதில் இன்னொரு நாடகமா? முதலில் எங்களுக்கு அடிப்படை வசதி கூட இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் பணக்கார முதலாளி வர்க்கத்தினரே. மதங்களை கொண்டு வோட்டுக்கள் வாங்க முடியும் ஆனால் எம் நாட்டை காப்பாற்ற முதல்வன் அர்ஜுன்/ஷங்கர் போன்றோர் சிந்தனை உடையோர் யாரவது வர வேண்டும். |
by k சஞ்சீவ்,bangalore,India 16-04-2010 07:04:35 IST |
மஞ்சள் மகிமை நன்றாக நடக்கிறது. குடும்பம் விருத்தி ஆகிறது |
by A Sankaranarayanan,Tirunelveli,India 16-04-2010 06:47:35 IST |
நல்லா இருங்கப்பா |
by ng nswamy,salem,India 16-04-2010 05:27:48 IST |
அஃதாவது கலைஞர் தனக்குக் கட்சித் தலைமைப் பதவியைத் தர விரும்பினால் தான் அமைச்சர் பதவியைத் துறக்கத தயார் என்று சொல்வதைப் புரிந்து கொள்ள வேண்டும்.௨. )கலைஞருக்குப்பின் அவரது குடும்பத்தினரிடம் மட்டுமே கட்சி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போட்டியே தவிர, குடும்பச் சண்டைக்காக அல்ல. இவ்வாறான சூழல்களை உருவாக்காவிட்டால் கலைஞருக்குப்பின் அடுத்துவரும் மூத்த தலைவர் யார் என்றுதான் பேச்சு வருமே தவிர குடும்பத்தினர் பெயர்கள் வரா. இப்பொழுதே குடும்பத்தினர் பெயர்களைக் கொண்டு வருவதால் அடுத்து குடும்பத்தினர்களில் ஒருவர்தான் கட்சித்தலைமையும் குடும்பத்திலுள்ள மற்றொருவர் ஆட்சித் தலைமையையும் அடுத்த நிலையிலுள்ள பதவிகளைக் குடும்பத்திலுள்ள பிறரும் பெறுவது எளிதாகும். அருமையான அரசியல் தந்திரம். இதனைப் புரிந்து கொள்ளாமல் கழகம் சிதையும் எனப் பகல் கனவு காண்பவர்கள் ஏமாற்றம் அடைவர். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் |
by I. Thiruvalluvan,chennai,India 16-04-2010 05:08:50 IST |
தமிழக மக்கள் அடுத்த குடும்ப அதிகார நாடகத்தை தாங்குவார்கள? முன்பு மாறன் சகோதரர்களால் கருத்து கணிப்பு நாடகம் அரங்கேறியதில் பத்திரிக்கை அலுவலகம் எரிந்து சிலர் அப்பாவி ஊழியர்கள் எரித்து கொல்லபட்டார்கள். ஆட்சி அதிகாரத்தில் அழகிரி விசுவரூபம் எடுத்தார்.கலைஞர் டிவி தோன்றியது.தாத்தா,பேரன் சண்டை பிறகு ராசியானது,தேர்தலில் நின்று அராஜாகத்தில் வெற்றி பெற்று பேரன்,மகன் மந்திரிகள் ஆனது, இப்போது மீண்டும் ஒரு மோசமான குடும்ப நாடகம் அரங்கேற போகிறது இதில் எத்தனை அப்பாவிகள் உயிர் போகுமோ தெரியலை,தமிழகம் முழுக்க இவர்களின் வன்முறை அரங்கேறும்,..முடிவு கலைஞர் குடும்பத்துக்கு சுபமாக தான் முடியும்.மீண்டும் அழகிரி மூலம் இந்த நாடகத்தை செம்மையாக நடத்தி முடிக்க திமுக மேல்மட்டம் தயார்.தமிழகத்துக்கு போதாதா ? நேரம் இந்த கலைஞர் குடும்பம்,திமுக மறைந்து விட்டது.கலைஞர் குடும்பம் தான் இனி திமுக, |
by GB ரிஸ்வான்,jeddah,SaudiArabia 16-04-2010 05:05:09 IST |
Why to Ms Kanimozhi? The Ministrial post can be transferred to his Son Dayanidhi Azhagiri.DMK has prooved that democracy is maintained in their party also |
by m sundaram,Thoothukudi-628008,India 16-04-2010 04:41:09 IST |
அடடா... இன்னாடா இது சப்புன்னு போய்ச்சி. இருந்தாலும் உட கூடாது. சரி கெடச்ச வரைக்கும் லாபம். கொஞ்சம் அவலு குடுத்துருக்குராறு எங்கயம்மா பேரை சொல்லி நல்லா மெல்லுவோம். அவ்வ்.... அவ்வ்... அவ்ங்.. அவ்ங்க்சி... உம்ம் இன்னும் நல்லா.... ஏய்ய்... இரு இரு இவுங்களுக்குள்ள சண்டைன்னு சொன்னா, நம்பவே முடியாது. நம்ம யம்மா கட்சிய குறி வச்சிருப்பாங்கோன்னு தான் அர்த்தம். இந்த நேரத்துல இவுரு ஏன் சென்ட்ரல விட்டு ஸ்டேட்டுக்கு வரணும்? இவரு இங்க வந்தா எலெக்ஷன்ல யம்மா கட்சிய கோழி அமுக்குரா மாறி அமுக்கிடுவாரே? அதுவும் இந்த நேரத்துல ஏன் வரணும்? ஆங்.. புரிஞ்சிச்சி. யம்மா... 2011 இல்லம்மா. 2010 ம்மா. சீக்கிரம் எழுந்து வாங்கோம்மா. தூங்குனது போதும்மா... |
by P பீ சேகர்,SINGAPORE,Singapore 16-04-2010 04:27:28 IST |
அழகிரி தனி திறமை படைத்தவர். தி மு க தலைமை ஏற்றாலும்,தமிழகம் வந்து,தனி அமைப்பு ஏற்படுத்தினாலும்,வெற்றி பெறுவார். |
by R Karuppiah சத்தியசீலன் ,Kinshasa,Congo(Zaire) 16-04-2010 03:49:41 IST |
Choose the right answer Who is the owner of TNadu. Ans: 1.MK 2.MKS 3.MKA 4.MKK 5.All of the Above 6.None of the above Ans: - 5 (All of the Above) |
by GVG ராஜு,vancouver,Canada 16-04-2010 03:42:28 IST |
யாருக்கும் தகுதி இல்லை என்றால் அதில் திரு அழகிரியும் அடக்கம் என்பதை அவர் உணரவில்லை போல. திமுக தொண்டன் எவருக்கும் திறமை இல்லை என்கிறார். பிறகு ஏன் தமிழகத்தை திறமையற்ற சட்டசபை உறுப்பினர் மற்றும் மந்திரிகள் கொண்டு முதல்வர் ஆட்சி செய்கிறார். தமிழக மக்களை முட்டாளாக்கவா? |
by W Alan,Chennai,India 16-04-2010 03:05:42 IST |
அய்யா கருணாநிதி விரும்பினால் நீங்கள் பதவி விலகுவது இருக்கட்டும், தமிழக மக்கள் எல்லாருக்கும் நீங்கள் பதவி விலகவேண்டும் என்று விருப்பம், செய்வீர்களா? அழகிரி அண்ணே, இன்னும் நீங்கள் கோதாவில் இறங்கவில்லையா? நாங்கள் எல்லாரும் ஆவலாக நீங்கள் சண்டை போட்டு கட்சி துக்கு நூறாக உடையும் காட்சியை காண துடித்துக்கொண்டு இருக்கிறோம். சீக்கிரமாக அண்ணா அறிவாலயத்திற்கு செல்லுங்கள், உங்கள் தம்பியின் சட்டையை பிடித்து ஏன்டா உனக்கு ஒரு பதவி கேடா, எனக்கு இல்லாத பதவி உனக்கு மட்டும் எப்படி கிடைக்கலாம் என்று ஒரு குத்து விடுங்கள், நீங்கள் போடும் சண்டையில் அஞ்சா நெஞ்சன் அழகிரினா சும்மாவா, மதுரை புயல் என்று இந்தியாவே உங்களை புகழ வேண்டும். |
by d divyaalakshmi ,Madurai,India 16-04-2010 02:55:53 IST |
அனுபவம் இல்லாத ஆளையெல்லாம் மந்திரியாக்குனா இப்படிதான். நீங்க கொஞ்சநாள் மந்திரியா இருந்துடீங்க உங்க சகோதரி கொஞ்சநாள் மந்திரியா இருக்கட்டுமே. அவங்களுக்கும் போரடிச்சா மந்திரி ஆவதற்கே ஒங்க குடும்பத்துல நிறையா ஆட்கள் இருக்குறாங்கள்ள. இதெல்லாம் தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு. என்ன கொடுமை சரவணன் |
by Guru,Chennai,India 16-04-2010 01:30:47 IST |
ஹ.. ஹ.. ஹ.. சரியான கூத்து. குடும்பத்திற்கு உள்ளேயே எல்லா பதவிகளையும் பங்கு போட்டுகிட்டா கட்சியில் உழைத்தவனுக்கு பட்டை நாமமா....? |
by C சுப்பு,Lagos,Nigeria 16-04-2010 01:27:23 IST |
அப்படியென்றால் முதல்வர் விரும்பினால் அழகிரி கட்சி தலைவர் போட்டியில் இருந்தும் விலகுவாரா? |
by M Amanullah,Dubai,UnitedArabEmirates 16-04-2010 01:06:00 IST |
அப்படி இருந்தும் கனிமொழிக்கு விட்டுகொடுப்பாராம், ஏன் இவருக்கு பிரதமர் பதவி ஆசையோ என்னவோ. அதுக்கெல்லாம் இந்த ஸ்போகன் இங்கிலீஷ் பத்தாது முனா கனா அனா. |
by s mani,vallanadu,India 16-04-2010 00:54:25 IST |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக