திங்கள், 12 ஏப்ரல், 2010

இலங்கை முகாம்களில் தவிக்கும் 80,500 தமிழர்கள்



கொழும்பு, ஏப். 11: இலங்கையில் பல்வேறு முகாம்களில் இருக்கும் 80,500 தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.இலங்கையில் நடைபெற்ற போரின் போது இடம்பெயர்ந்த தமிழர்கள், பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு முகாம்களில் இருந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியமர்த்தும் பணியில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இதன்படி 1 லட்சத்து 93 ஆயிரத்து 607 தமிழர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும் வவுனியாவின் செட்டிக்குளத்திலுள்ள பல்வேறு முகாம்களில் இன்னமும் 80,500 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தங்கள் சொந்த தேவைகளுக்கும், உறவினர்களை சந்திப்பதற்கும் கூட ராணுவத்தினரின் ஒப்புதலை அவர்கள் பெறவேண்டியுள்ளது.
கருத்துக்கள்

சொந்தஊர்களுக்கு அனுப்பப்பட்டதாக இலங்கையும் இந்தியாவும் பரப்புரை மேற்கொணடாலும் அவர்களின் சொந்த வீடுகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாலும் முகாம்களில்தான் அடைக்கப்பட்டுள்ள்னர். அஃதாவது முகாம்களை மாற்றியுள்ளனர். அவ்வளவுதான். இதனையே தமிழர்களுக்கான மறுவாழ்வு அளிக்கப்பட்டதாகக் கதை அளந்து வருகின்றனர். உலக அமைப்புகள் எனப் பலவற்றை வைத்துக் கொண்டு மனித நேயத்தை மடியச் செய்வது உலகிற்கே அழிவு என்பதை அனைத்து நாடுகளும் உணர வேண்டும். கடும் போராட்டங்களின் மூலம் விடுதலை பெற்ற வியத்துநாம் போன்ற நாடுகள் கூட அரசியல் காரணங்களுக்காக மண்ணின் மைந்தர்களின் விடுதலை வேட்கைக்கு எதிராகச் செயல்படும் போக்கு மேலோங்கியுள்ள போது ஈழத் தமிழினத்தைக் காப்பாற்றுவதற்கு நடுநிலை என்றும் அணிசேராமை என்றும் பேசி வரும் நாமாவது முன்வரவேண்டாமா? இதற்கு இந்தியா ஒத்துழைப்பு தருவதால்தானே காட்டுமிராண்டி ஆட்சியில் அமைதி திருமபிவிடடதாகக் கூறித் தாயகத்திலிருந்து ஏதிலிகளாகத் திருமபி வருவோரை வரவேற்காமல் விரட்டியடிக்கின்றன ஆசுதிரேலியா முதலிய நாடுகள்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக