வியாழன், 15 ஏப்ரல், 2010

தலைகீழாக எழுதும் கிறுக்குத்தனத்தைஎப்படிச் சாதனை என்று சொல்ல முடியும்? திருக்குறள் பரவலுக்கான ஆக்கபூர்வச் சாதனை எதுவும் செய்திருக்கலாமே! வேலையில்லாதவன் பூனை முடியை மழிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அருள்கூர்ந்து இப்படிப்பட்ட அறியாமைச் செயல்களைச் சாதனை என்று சொல்லி ஊக்கப்படுத்த வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

General India news in detail

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெண் ஒருவர், 1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி சாதனை புரிந்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோட்டில் வசிப்பவர் பாஞ்சாலை (51). இவரது கணவர் நடராஜன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பாஞ்சாலையின் நான்கு மகன்களில், இருவருக்கு திருமணமாகி விட்டது. மகளிர் சுய உதவிக்குழுவில் ஊக்குனராக இருந்து, பெண்கள் வங்கி கடனுதவி பெற உதவி வருகிறார்.இவர், 1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி முடித்து சாதித்துள்ளார். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் தமிழ்தாய் வாழ்த்து முழுவதையும் தலைகீழாக எழுதியுள்ளார். இதனை கண்ணாடி எதிரில் வைத்து பார்த்தால் மட்டுமே, நேராக படிக்க முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக