வெள்ளி, 16 ஏப்ரல், 2010

அஃதாவது கலைஞர் தனக்குக் கட்சித் தலைமைப் பதவியைத் த்ர விரும்பினால் தான் அமைச்சர் பதவியைத் துறக்கத தயார் என்று சொல்வதைப் புரிந்து கொள்ள வேண்டும்.௨. )கலைஞருக்குப்பின் அவரது குடும்பத்தினரிடம் மட்டுமே கட்சி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போட்டியே தவிர, குடும்பச் சண்டைக்காக அல்ல. இவ்வாறான சூழல்களை உருவாக்காவிட்டால் கலைஞருக்குப்பின் அடுத்துவரும் மூத்த தலைவர் யார் என்றுதான் பேச்சு வருமே தவிர குடும்பத்தினர் பெயர்கள் வரா. இப்பொழுதே குடும்பத்தினர் பெயர்களைக் கொண்டு வருவதால் அடுத்து குடும்பத்தினர்களில் ஒருவர்தான் கட்சித்தலைமையும் குடும்பத்திலுள்ள மற்றொருவர் ஆட்சித் தலைமையையும் அடுத்த நிலையிலுள்ள பதவிகளைக் குடும்பத்திலுள்ள பிறரும் பெறுவது எளிதாகும். அருமையான அரசியல் தந்திரம். இதனைப் புரிந்து கொள்ளாமல் கழகம் சிதையும் எனப் பகல் கனவு காண்பவர்கள் ஏமாற்றம் அடைவர். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல்வர் விரும்பினால் அமைச்சர் பதவியை துறக்க தயார்: அழகிரி
ஏப்ரல் 16,2010,00:00 IST
Front page news and headlines today

சென்னை : ''முதல்வர் கருணாநிதி விரும்பினால், அமைச்சர் பதவியை துறக்க தயார்,'' என மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.


முதல்வர் கருணாநிதிக்கு இணையான திறமை, கட்சியில் வேறு யாருக்கும் கிடையாது. தி.மு.க., தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தினால், அதில் நிச்சயம் போட்டியிடுவேன். மத்திய அமைச்சர் அழகிரியின், சமீபத்திய இதுபோன்ற பேச்சுக்கள் தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் ஒரு விழாவில் பங்கேற்ற அழகிரி, நிருபர்களிடம் கூறும் போது, 'என் தந்தையும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரும்பினால், எனது மத்திய அமைச்சர் பதவியை கனிமொழிக்காக விட்டுக் கொடுக்க தயாராக உள்ளேன். ஆனால், கனிமொழிக்காக பதவியில் இருந்து விலகுவேன் என யார் சொன்னது? இதுகுறித்து கருணாநிதி, சோனியாவை சந்திக்க இருந்தாரா? என்பது எனக்குத் தெரியாது. இந்த கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும்' என்றார்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
Why to Ms Kanimozhi? The Ministrial post can be transferred to his Son Dayanidhi Azhagiri.DMK has prooved that democracy is maintained in their party also
by m sundaram,Thoothukudi-628008,India 16-04-2010 04:41:09 IST
அடடா... இன்னாடா இது சப்புன்னு போய்ச்சி. இருந்தாலும் உட கூடாது. சரி கெடச்ச வரைக்கும் லாபம். கொஞ்சம் அவலு குடுத்துருக்குராறு எங்கயம்மா பேரை சொல்லி நல்லா மெல்லுவோம். அவ்வ்.... அவ்வ்... அவ்ங்.. அவ்ங்க்சி... உம்ம் இன்னும் நல்லா.... ஏய்ய்... இரு இரு இவுங்களுக்குள்ள சண்டைன்னு சொன்னா, நம்பவே முடியாது. நம்ம யம்மா கட்சிய குறி வச்சிருப்பாங்கோன்னு தான் அர்த்தம். இந்த நேரத்துல இவுரு ஏன் சென்ட்ரல விட்டு ஸ்டேட்டுக்கு வரணும்? இவரு இங்க வந்தா எலெக்ஷன்ல யம்மா கட்சிய கோழி அமுக்குரா மாறி அமுக்கிடுவாரே? அதுவும் இந்த நேரத்துல ஏன் வரணும்? ஆங்.. புரிஞ்சிச்சி. யம்மா... 2011 இல்லம்மா. 2010 ம்மா. சீக்கிரம் எழுந்து வாங்கோம்மா. தூங்குனது போதும்மா...
by P பீ சேகர்,SINGAPORE,Singapore 16-04-2010 04:27:28 IST
அழகிரி தனி திறமை படைத்தவர். தி மு க தலைமை ஏற்றாலும்,தமிழகம் வந்து,தனி அமைப்பு ஏற்படுத்தினாலும்,வெற்றி பெறுவார்.
by R Karuppiah சத்தியசீலன் ,Kinshasa,Congo(Zaire) 16-04-2010 03:49:41 IST
Choose the right answer Who is the owner of TNadu. Ans: 1.MK 2.MKS 3.MKA 4.MKK 5.All of the Above 6.None of the above Ans: - 5 (All of the Above)
by GVG ராஜு,vancouver,Canada 16-04-2010 03:42:28 IST
யாருக்கும் தகுதி இல்லை என்றால் அதில் திரு அழகிரியும் அடக்கம் என்பதை அவர் உணரவில்லை போல. திமுக தொண்டன் எவருக்கும் திறமை இல்லை என்கிறார். பிறகு ஏன் தமிழகத்தை திறமையற்ற சட்டசபை உறுப்பினர் மற்றும் மந்திரிகள் கொண்டு முதல்வர் ஆட்சி செய்கிறார். தமிழக மக்களை முட்டாளாக்கவா?
by W Alan,Chennai,India 16-04-2010 03:05:42 IST
அய்யா கருணாநிதி விரும்பினால் நீங்கள் பதவி விலகுவது இருக்கட்டும், தமிழக மக்கள் எல்லாருக்கும் நீங்கள் பதவி விலகவேண்டும் என்று விருப்பம், செய்வீர்களா? அழகிரி அண்ணே, இன்னும் நீங்கள் கோதாவில் இறங்கவில்லையா? நாங்கள் எல்லாரும் ஆவலாக நீங்கள் சண்டை போட்டு கட்சி துக்கு நூறாக உடையும் காட்சியை காண துடித்துக்கொண்டு இருக்கிறோம். சீக்கிரமாக அண்ணா அறிவாலயத்திற்கு செல்லுங்கள், உங்கள் தம்பியின் சட்டையை பிடித்து ஏன்டா உனக்கு ஒரு பதவி கேடா, எனக்கு இல்லாத பதவி உனக்கு மட்டும் எப்படி கிடைக்கலாம் என்று ஒரு குத்து விடுங்கள், நீங்கள் போடும் சண்டையில் அஞ்சா நெஞ்சன் அழகிரினா சும்மாவா, மதுரை புயல் என்று இந்தியாவே உங்களை புகழ வேண்டும்.
by d divyaalakshmi ,Madurai,India 16-04-2010 02:55:53 IST
அனுபவம் இல்லாத ஆளையெல்லாம் மந்திரியாக்குனா இப்படிதான். நீங்க கொஞ்சநாள் மந்திரியா இருந்துடீங்க உங்க சகோதரி கொஞ்சநாள் மந்திரியா இருக்கட்டுமே. அவங்களுக்கும் போரடிச்சா மந்திரி ஆவதற்கே ஒங்க குடும்பத்துல நிறையா ஆட்கள் இருக்குறாங்கள்ள. இதெல்லாம் தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு. என்ன கொடுமை சரவணன்
by Guru,Chennai,India 16-04-2010 01:30:47 IST
ஹ.. ஹ.. ஹ.. சரியான கூத்து. குடும்பத்திற்கு உள்ளேயே எல்லா பதவிகளையும் பங்கு போட்டுகிட்டா கட்சியில் உழைத்தவனுக்கு பட்டை நாமமா....?
by C சுப்பு,Lagos,Nigeria 16-04-2010 01:27:23 IST
அப்படியென்றால் முதல்வர் விரும்பினால் அழகிரி கட்சி தலைவர் போட்டியில் இருந்தும் விலகுவாரா?
by M Amanullah,Dubai,UnitedArabEmirates 16-04-2010 01:06:00 IST
அப்படி இருந்தும் கனிமொழிக்கு விட்டுகொடுப்பாராம், ஏன் இவருக்கு பிரதமர் பதவி ஆசையோ என்னவோ. அதுக்கெல்லாம் இந்த ஸ்போகன் இங்கிலீஷ் பத்தாது முனா கனா அனா.
by s mani,vallanadu,India 16-04-2010 00:54:25 IST


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக