வியாழன், 15 ஏப்ரல், 2010


தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து



சென்னை, ஏப். 13: சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள்: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா: மலர இருக்கும் விக்ருதி ஆண்டு அனைவருக்கும் வளம் கொழிக்கும் ஆண்டாகவும், வளர்ச்சியையும், வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாகவும் விளங்கட்டும்.செயற்கைத் தடைகளைத் தகர்த்தெறிந்து, புதிய வளர்ச்சியையும், மலர்ச்சியையும் தமிழக மக்களுக்கு வழங்கும் வகையில், புதிய சாதனைகள் படைக்கும் ஆண்டாக, சிறப்பான மாற்றங்களை மக்களுக்கு தரக் கூடிய ஆண்டாக இந்தப் புத்தாண்டு விளங்கட்டும்.வைகோ: கத்திரி வெயிலுடன் முத்திரை பதிக்கும் சித்திரைத் திருநாள் பிறக்கின்றது. வாசம் சேர்க்கும் வசந்தம் இத்திங்களில் வருவதால், பண்டைத் தமிழர் வசந்த விழாக்களை சித்திரை நாளில் சிறப்புறக் கொண்டாடினர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.இப்போது மக்களை வாட்டும் பிரச்னைகள் மாறி, மக்கள் அனைவருக்கும் சித்திரைத் திருநாள் சிறப்புகள் சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.பொன். ராதாகிருஷ்ணன்: உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சித்திரை முதல் தேதி வரும் புத்தாண்டினை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். தமிழர்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.மழை பொழிந்து, மண் செழித்து விவசாயம் பெருகவும், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காணவும் இந்த தமிழ்ப் புத்தாண்டு அடித்தளம் அமைத்து தர வாழ்த்துகிறேன்.அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் எஸ்.ஷேக் தாவூத், இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் எஸ்.ஜே. இனாயத்துல்லா, நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், வன்னியர் கூட்டமைப்புத் தலைவர் சி.என். ராமமூர்த்தி, அகில இந்திய கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கப் பொதுச் செயலாளர் வி. ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கருத்துக்கள்

அரசால் ஆதாயம் அடைந்து கலைஞரின் கைப்பிள்ளையாக வேடமிடும் தினமணி அரசின் கொள்கைக்கு மாறாகச் சித்திரை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டு எனக் குறிக்கலாமா? கிறித்துவப் புத்தாண்டு சனவரி 1 க்கு மாறியபின்பும் ஏப்பிரல் 1இல் கொண்டாடியவர்கள் ஏப்பிரல் முட்டாள்கள் என அழைக்கப்பட்டார்கள். அப்படியாயின் தை முதல் நாளை ஆண்டின் தொடக்கமாக அறிவித்த பின்பும் சித்திரையில் கொண்டாடுபவர்களைச் சித்திரை முட்டாள்கள் என்று சொ்ல்லும் வழக்கம் வருமோ?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
4/15/2010 2:58:00 AM

தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

By usanthan
4/15/2010 12:18:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக