புதன், 14 ஏப்ரல், 2010

பிரபாகரன் புகைப்பட ஆல்பம் மீட்பு



கொழும்பு, ஏப்.13: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்பட ஆல்பம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவில் நடந்து வரும் தேடுதல் பணியின் போது இவை கைப்பற்றப்பட்டன. இந்த புகைப்பட ஆல்பமும், ஆவணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இலங்கை ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கே தெரிவித்தார். தவிர, முல்லைத்தீவு பகுதியில் இருந்து புலிகள் பதுக்கி வைத்திருந்த 4 விடியோ கேசட்டுகளையும் பாதுகாப்பு வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த விடியோ கேசட்டுகளில் பிரபாகரனின் நடவடிக்கை குறித்த அனைத்து தகவல்களும் அடங்கியுள்ளன என்றும் அவர் கூறினார். விடுதலைப் புலிகளின் கைவசம் இருந்த பகுதிகளை கைப்பற்றிய பின்னர் அந்தப் பகுதியில் புலிகள் மறைத்துவைத்திருந்த கண்ணிவெடிகள் உள்பட ஆயுதங்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக புலிகளின் ஆயுதங்களை மீட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் கடந்த சனிக்கிழமை நடந்த தேடுதல் பணியின் போது புலிகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களை கண்டுபிடித்து மீட்டதாகவும் பிரசாத் சமரசிங்கே தெரிவித்தார்.புத்தாண்டு வாழ்த்து: சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி ராணுவ வீரர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் இலங்கை தலைமை லெப்டினட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா. புலிகளை வென்றதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு புதுவிதமான புத்தாண்டை கொண்டாடவுள்ளோம். முந்தைய ஆண்டுகளைவிட இந்த புத்தாண்டு மகிழ்ச்சியானது என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

பாவம்! அவர்களால் சில ஒளிப்படங்களைத்தான் கண்டுபிடிக்க முடிந்தத. அதுவும் தமிழ்நிலத்தை வன்கொடுமையால் கைப்பற்றிய ஓராண்டிற்குப் பின்பு! தமிழ்த்தேச ஞாலத்தலைவர் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க முடியவி்ல்லை. இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/14/2010 3:19:00 AM

ஐயோ கடவுளே! இந்த சிங்களம் கட்டுக் கதைகளைப பரப்புவதற்கும் பொய்மூட்டைகளை அவிழ்த்து மக்களைக் குழப்ப முயல்வதற்கும் ஓர் அளவே இல்லையா?

By usanthan
4/14/2010 1:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக