சென்னை:'பல்வேறு பொறுப்புகளில் உள்ள தி.மு.க.,வினர், தாம் வகிக்கும் பொறுப் புகள் பற்றி தான் செய்தியாளர்களிடம் விளக்கமளிக்க வேண்டும். கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி, எவரும் தன்னிலை விளக்கம் தருவது ஏற்கக் கூடியதல்ல. கட்சி தொடர்புடைய செய்திகளை தலைமை தான் வெளியிட வேண்டும்' என்று, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:அரசியல் சம்பந்தமான பேட்டிகள் அல்லது அவரவர் சொந்தக் கருத்துகள் பற்றிய சர்ச்சைகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னவை, சொல்லாதவை என்று, தங்களது எண்ணங்களுக்கு ஏற்ப செய்திகளை வெளியிடுவதும், அதனால் தேவையற்ற குழப்பங்கள் தூண்டிவிடப்படுவதும், கடந்த காலங்களில் மட்டுமின்றி நிகழ் காலத்திலும் நடப்பவைகளாக இருப்பது அனைவரும் அறிந்தது. தி.மு.க., வளர்ச்சியில் ஊக்க நிலையைத் தடுத்து, ஒரு தேக்க நிலையை உருவாக்க பல முனைகளிலிருந்து முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. அந்த முயற்சிகள், போர்க்களத்தில் ஒரு வீரன் மீது பொழியப்படும் கணைகள் போல் என்னையும், இந்த இயக்கத்தையும் நிலை குலையச் செய்துவிடும் என்று யாராவது எதிர்பார்ப்பார்களேயானால், அவர்கள் இக்கட்சி நடந்து வந்த பாதையை அறியாதவர்களாகவும், அறிந்திருந்தும் அதை மறந்தவர்களாகவும் தான் கருதப்படுவர்.
தி.மு.க.,வினர் யாரும் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாநில ஆட்சி, மத்திய ஆட்சி என்று பதவிப் பொறுப்பில் இருப்பாராயின், அப்பொறுப்பு பற்றிய ஐய வினாக்களுக்கும், அறிவிப்புகளுக்கும் மட்டுமே செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்.தி.மு.க., எடுக்க வேண் டிய முடிவுகள், ஈடுபட வேண்டிய செயல்கள், மற்ற கட்சிகளுடனான உறவு பற்றியெல்லாம் பொதுக் குழு, செயற்குழு எடுக்கும் முடிவுகளை செய்தியாளர்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பை நானும், பொதுச் செயலரும் பெற்றிருக்கிறோம்.கட்சிக் கட்டுப்பாட்டுக்கு மீறிய நிலையில், தி.மு.க.,வினர் எவரும் தன்னிலை விளக்கங்கள் தர, கட்சி அமைப்புகள் இருக்கும் போது, அதை விடுத்து செய்தியாளர்கள் சந்திப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் ஏற்புடையதல்ல.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
|
வாசகர் கருத்து |
|
![]() ![]() |
by k.k shanmugam,chennai,India 16-04-2010 19:30:31 IST |
![]() ![]() |
by A Karthikeyan,bahrain,India 16-04-2010 17:57:39 IST |
![]() ![]() |
by a ஜெயப்ரகாஷ்,pune,India 16-04-2010 15:05:15 IST |
![]() ![]() |
by v prakash,chennai,India 16-04-2010 13:50:56 IST |
![]() ![]() |
by pn balasubramanian,chennai,India 16-04-2010 12:36:40 IST |
![]() ![]() |
by உண்மை விளம்பி ,Ahmedabad,India 16-04-2010 12:36:33 IST |
![]() ![]() |
by Muthu Jayaram,AbuDhabi,UnitedArabEmirates 16-04-2010 12:12:14 IST |
![]() ![]() |
by k anjanenjan,dubai,UnitedArabEmirates 16-04-2010 11:47:47 IST |
![]() ![]() |
by மு.க.,CHENNAI,India 16-04-2010 11:16:46 IST |
![]() ![]() |
by மு.க.,CHENNAI,India 16-04-2010 11:16:26 IST |
![]() ![]() |
by S விஜயகுமார்,AKASAMPET,India 16-04-2010 10:15:57 IST |
![]() ![]() |
by thalaivan,Loc,India 16-04-2010 10:09:23 IST |
![]() ![]() |
by AR Arvindh,Chennai,India 16-04-2010 10:08:50 IST |
![]() ![]() |
by K JEEVITHAN,VILLUPURAM,India 16-04-2010 09:21:20 IST |
![]() ![]() |
by பிரசாத்,Chicago,UnitedStates 16-04-2010 09:20:42 IST |
![]() ![]() |
by H நாராயணன்,Hyderabad,India 16-04-2010 08:46:21 IST |
![]() ![]() |
by k sathish,madurai,India 16-04-2010 08:41:04 IST |
![]() ![]() |
by rajasji,münchen,Germany 16-04-2010 08:29:43 IST |
![]() ![]() |
by GB ரிஸ்வான்,jeddah,SaudiArabia 16-04-2010 07:11:27 IST |
![]() ![]() |
by k சஞ்சீவ்,bangalore,India 16-04-2010 07:05:54 IST |
![]() ![]() |
by GB ரிஸ்வான் ,jeddah,SaudiArabia 16-04-2010 06:09:58 IST |
![]() ![]() |
by M ரமேஷ்,NY,UnitedStates 16-04-2010 05:28:29 IST |
![]() ![]() |
by I. Thiruvalluvan,chennai,India 16-04-2010 04:58:56 IST |
![]() ![]() |
by R Karuppiah சத்தியசீலன் ,Kinshasa,Congo(Zaire) 16-04-2010 04:04:03 IST |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக