சனி, 17 ஏப்ரல், 2010

சிறைச்சாலைகளில் நூலகங்கள்: தங்கம் தென்னரசு



சென்னை, ஏப்.16: "சிறைச்சாலைகளில் சிறகுகள்' என்ற திட்டத்தின் கீழ் புழல் மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.​சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு:​ திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம் தோற்றுவிக்கப்படும். 10-ம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெறும் நூலகப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.​"சிறைச்சாலைகளில் சிறகுகள்' என்ற திட்டத்தின் கீழ் புழல் மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும். பொது நூலக இயக்கத்தின் கீழ் வாடகை கட்டடங்களில் செயல்படும் நூலகங்களுக்கு சொந்த நூலகக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.​ அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு, மதிப்பெண் அட்டவணைகளை சரிபார்க்கவும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மையறியவும் ஏதுவாக ரூ.20 லட்சம் செலவில் ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பராமரிப்பு செய்யப்படும் என்று அறிவித்தார்.
கருத்துக்கள்

நல்ல திட்டம். பாராட்டுகள். (சிறைச்சாலைகளில் இப்பொழுதும் பள்ளிகளும் அதனால் நூலகங்களும் உள்ளன அல்லவா? )

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar thiruvalluvan
4/17/2010 3:08:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக