வியாழன், 6 ஆகஸ்ட், 2009

புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க முறையான சட்டம் இல்லை: தலைமைச் செயலர் ஸ்ரீபதி



சென்னை, ஆக. 4: நாட்டில் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க முறையான சட்டம் ஏதும் இல்லை என தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி தெரிவித்தார்."புராதனச் சின்னங்களைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.கருத்தரங்கைத் துவக்கி வைத்து தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி பேசியதாவது:நமது நாட்டில் முறையான பராமரிப்பு இல்லாததால் துவாரகா உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் சிதிலமடைந்து வருகின்றன.நாம் அன்பை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகிறோம். அந்த அன்பை புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பதில் வெளிப்படுத்தினால் அவற்றை நாம் காக்க முடியும்.கல்குவாரிகளுக்கு தடை... நமது புராதனச் சின்னங்கள் பெரும்பாலும் மலைகளில்தான் உள்ளன. எனவே நினைவுச் சின்னங்கள் நிறைந்த மலைகளில் கல்குவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் நமது பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் கட்டுமானப் பொறியாளர் துறை மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.முறையான சட்டம் இல்லை... ஒவ்வொரு புராதனச் சின்னமும் தூரத்தில் இருந்து பார்த்தால்தான் அதன் அழகை ரசிக்கும்படி இருக்கும்.ஆனால் அந்தச் சின்னங்களை சுற்றி இப்போது கட்டடங்களை அதிக அளவில் எழுப்பி வருகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் அதன் அழகை முழுமையாக ரசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இவற்றைப் பாதுகாக்க முறையான சட்டம் ஏதும் இல்லை. எனவே மக்களே முன்வந்து இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார் ஸ்ரீபதி.
சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளர் இறையன்பு
, தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் ஸ்ரீதர், சுற்றுலாத் துறை இயக்குநர் மோகன்தாஸ், மத்திய அரசின் தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் சத்தியபாமா பத்ரிநாத், அறநிலையத் துறை ஆணையர் சம்பத் உள்பட பலர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கருத்துக்கள்

பழமைச் சின்னங்களைத் தூரத்தில் நின்று பார்த்தால் தான் அதன் அழகை ரசிக்க முடியும் ஆனால் அவற்றைச்சுற்றி இன்று பார்வைக்குத் தடையாகக் கட்டடங்களையும் கடைகளையும் எழுப்பி உள்ளனர் என்று சொல்லியிருக்கும் தலைமைச் செயலர் அவற்றைப் பாதுகாக்கச் சட்டம் எதுவும் இல்லாததால் மக்களே முன்வந்து பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது இலவு காத்த கிளி கதைதான். மக்களில் பலம் வாய்ந்த ஒரு பகுதியினர் தானே தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்; சாதாரண மக்கள் அதன் அருகே கூட நெருங்க முடியாது. அந்தச் சாதாரண மக்களின் எண்ணமெல்லாம் அரசாங்கமே பழமைச் சின்னங்களைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினர் காணும் வகை செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கெனச் சட்டங்கள் இல்லையென்றால் அவற்றை இயற்றியாவது பாதுகாக்க வேண்டும்.

By ப. இராசமோகன்
8/5/2009 12:58:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக