கொழும்பு, ஆக. 4: வெளிநாடு வாழ் தமிழர்கள் இலங்கைக்கு அனுப்பிய நிவாரணப் பொருள்கள், முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருக்கின்றன.இலங்கையில் முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக வெளிநாடுவாழ் தமிழர்கள் சார்பில் திரட்டி, கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் கடந்த ஜூலை 9-ம் தேதி கொழும்புத் துறைமுகத்தில் இறக்கப்பட்டன. எனினும், இதை விநியோகிப்பதில் பல்வேறு தடைகள் இருந்து வந்தன.இந்நிலையில், இறக்குமதி வரி உள்ளிட்ட வரிகளிலிருந்து இந்தப் பொருள்களுக்கு விலக்கு அளிக்க இலங்கை அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான பணிகள் இன்று தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாள்களில் முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்த நிவாரணப் பொருள்கள் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கள்
'ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஓம் அளவும்ஓர் நோய்'' என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தனக்காகவும் செய்யத் தெரியாது. அடுத்தவர் சொன்னாலும் செய்யத் தெரியாது.இத்தகையோர் வாழும் வரை துன்பமே. சிங்களமும் இந்தியக் காங்.கும் தாமாகவும உதவுவதில்லை. அடுத்தவர் கொடுத்த உதவியையும் பயன்படுத்துவதில்லை. இத்தகைய அரசுகள் இருந்தென்ன பயன்? மறைந்தென்ன தீமை? ஒழியட்டும் இவை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/5/2009 2:03:00 AM
8/5/2009 2:03:00 AM