மெல் போர்ன், டிச:17: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களை குடியமர்த்த நியூசிலாந்து, கனடா, நார்வே நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவிடம் உதவி கோரப்பட உள்ளதாகத் தெரிகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் கடல்பகுதியில் தஞ்சம் கோரி 78 இலங்கைத் தமிழர்களுடன் வந்த படகு கவிழ்ந்தது. இதில் வந்த 78 பேரையும் ஆஸ்திரேலிய கடற்படையினர் காப்பாற்றினர். இவர்களைக் குடியமர்த்துவதற்கு நியூசிலாந்து, கனடா, நார்வே நாடுகள் ஆர்வம்காட்டி வருகின்றன. ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி படகில் வரும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமைகூட ஆஷ்மோர் தீவில் 55 பேருடன் வந்த படகு கடற்படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டது. படகில் வந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக வந்ததாகத் தெரிவித்தனர். அவர்கள் கிறிஸ்துமஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுபோல் இந்தாண்டில் மட்டும் 55 படகுகள் இலங்கைத் தமிழர்களுடன் வந்துள்ளன. இப்படகுகளில் வந்தவர்களின் எண்ணிக்கை 1498 என்று ஆஸ்திரேலியாவின் குடியேற்றத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இவர்களனைவரும் ஆஸ்திரேலியாவில் போலீஸ் பாதுகாப்புடன் கூடிய அகதிகள் முகாமில் தங்கவைக்கப்படுவர்.
கருத்துக்கள்
மனித நேயம் மிக்க
ஆசுதிரேலியா அரசிற்குப் பாராட்டுகள்.
தமிழ் ஈழம் உரிமையுடன் திகழவும்
தன் ஒத்துழைப்பை நல்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
12/18/2009 7:13:00 AM
12/18/2009 7:13:00 AM