சனி, 19 டிசம்பர், 2009

இலங்கைக்கு 77 மில்லியன் டாலர்கள்: உலக வங்கி நிதியுதவி



கொழும்பு, டிச.18- இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக உலக வங்கி 77 மில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஒப்புதல் நேற்று வாஷிங்டனில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இடம்பெயர்ந்த மக்களின் மறுகுடியேற்றப் பணிகளுக்காக 65 மில்லியன் டாலர்களும், மீதமுள்ள நிதி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சாலைகளை பராமரிப்பதற்காகவும் மற்றும் விவசாய வேலைத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துக்கள்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன். ஈழத் தமிழர்களும் அவ்வாறுதான். அவர்கள் இருந்தாலும் இறக்கடிக்கப்பட்டாலும் சிங்களர்களுக்குப் பண மழை கொட்டுகிறதே! அந்த நன்றிக்காகவாவது அவர்கள் நலனில் சிறிதேனும் கருத்து செலுத்தக் கூடாதா? மனித நேயம் உள்ளவர்கள் போல் கேள்விப் போர்வையை விரித்து விட்டு வஞ்சகமாகப் போர்வையின் கீழே சிங்களத்துடன் கூடிக் குலாவும் அமெரிக்காவும் பன்னாட்டு நிறுவனங்களும் என்றுதான் திருந்துமோ?!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/19/2009 4:08:00 AM

Good idea ;but who is going to watch the Srilankan Government about how they spend this 77 millions dollars. I guess they'll spend all 77 millions dollar in he South where Sinhalese live; it is the history of Srilanka character. Moreover, Indian gave away about 1000 cros Indian money to Srilanka. Where are all these money gone. Any one watched this 1000 cros money where did they spend. Ranil Wickramasinghe ask this question in Indian soil ;but , no one responsed about his question. Kothabaya's swiss bank account full of dollars right now. When Sarath Fonseka defeat Rajapaksha family in the presidential election ; Kothabaya Rajapaksh run away to USA with the swiss bank account. Right now Kothabaya Rajapaska's son is in NASA educational program which is cost about 10 millions dollars monthly.

By Kandasamy
12/18/2009 3:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Top global news update

வாஷிங்டன் : முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகளுக்காக, இலங்கைக்கு 385 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குனர் நோகோ இஷி கூறியதாவது:இலங்கையில் முகாம்களில் வசித்த ஒரு லட்சம் தமிழர்கள், அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு அடிப்படை வசதிகளையும், கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு, பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது என்பது மிகவும் சவாலான பணி. இதற்கு உதவும் வகையில் இலங்கைக்கு 385 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது. இலங்கையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு மற்ற அமைப்புகளும் உதவ வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக