சிறந்த பிற மொழிப் பாடகர் என்பதற்காக அரசியல் செல்வாக்கால் இவருக்கு விருது கொடுப்பதால் தமிழிசைக்கே அவமானம்! அவமானம்! அவமானம்! அரசில் செல்வாக்கு மிக்க அருணா சாயிராம் வேறு அமைப்பின் சார்பில் எத்தகைய உயர்ந்த விருதைப் பெற்றாலும் ஏற்கத் தக்கதே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அருணா சாயிராம் சிறந்த இசைவாணர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், மரக்கறி உண்போர் பேரவை சார்பில் சிறந்த இறைச்சி சமைப்போருக்கு விருது கொடுத்து ஊக்குவிப்பதுண்டா? வள்ளலார் பேரவை சார்பாக கோட்சேக்கு விருது கொடுத்தால் என்ன சொல்வது? தமிழிசைச் சங்கம் தமிழிசை வாணருக்கு மட்டுமே விருது கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். ஏதோ சில தமிழ்ப்பாடல்களும் பாடுகிறார் என்பதற்காக பிற மொழிப்பாடல்களையே பரப்பி வரும் அருணா சாயிராமிற்கு விருது வழங்குவது முற்றிலும் சரியல்லல. தமிழ்நாட்டு அரசின் இசைக்கல்லூரிகளுக்கு அறிவுரையாளராக இருக்கிறாரே என எண்ணலாம். பதவியேற்ற இத்தனை ஆண்டுகளில் ஏதோ விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில விழாக்களுக்ககுத்தான் வந்துள்ளாரே தவிர தனக்குரிய கடமையைச் சிறிதும் ஆற்றியதில்லை. மேலும் தமிழ் நாட்டிலேயே இல்லாமல் - ஏன், இந்தியாவிலேயே இல்லாமல்- தனக்குரிய மதிப்பூதியத்தை வாங்கி மோசடி செய்து வருகிறார். சிறந்த பிற மொழிப் பாடகர் என்பதற்காக அரசியல் செல்வாக்கால் இவருக்கு விருது கொடுப்பதால் தமிழிசைக்கே அவமானம்! அவமானம்! அவமானம்! அரசில் செல்வாக்கு மிக்க அருணா சாயிராம் வேறு அமைப்பின் சார்பில் எத்