காங்கிரசைப் பொறுத்த வரை ஒத்தி வைப்பது என்றால் அமைதியாக நிறைவேற்றவதுதான். இதற்குப் போய் நன்றி தெரிவித்துத் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வெட்கமும் வேதனையும் படவைத்து விட்டாரே கலைஞர் அவர்கள். எதற்கும், பவாரின் செல்வாக்கு உயரும் பொழுது உதவியாக இருக்கட்டும் என்று நன்றி தெரிவித்தாரா? அல்லது ஈழப் போரை நிறுத்தியதாகக் கூறி நன்றி தெரிவித்தது போன்று நன்றி தெரிவித்துப் பெருமைப் பட்டியலில் சேர்க்கவும் துதிபாடும் சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டப்படவும் நன்றி தெரிவித்தாரா? தமிழ்நாட்டு முசிபூர் இரகுமான் அவர்களே! உங்களின் இனவுணர்வு பழங்கதையாய்ப் போக வேண்டா! அறிக்கை எண்ணிக்கையின் கூடக் கூட உங்களின் செல்வாக்கு சரிவதை உணருங்கள்! உங்களை நம்பியுள்ள மக்களுக்காக - நாட்டு மக்களுக்காக - ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டே உரிமைக் குரல் எழுப்பி வெற்றி காணுங்கள்!
உங்கள் அன்பர்களில் ஒருவனான
இலக்குவனார் திருவள்ளுவன்
12/18/2009 7:06:00 AM
!!!! மசோதா ஒத்திவைக்கப்பட்டதற்காக நன்றியா ada kadavule you too smart /////
12/18/2009 6:01:00 AM
மசோதா ஒத்திவைக்கப்பட்டதற்காக நன்றியா? இந்த மசோதாவையே நீக்கவல்லவா கருணா போராடியிருக்கவேண்டும்! இந்த மசோதா ஒத்திவைக்கப்பட்டதற்காக நன்றியா? இந்த மசோதா மீண்டும் கொஞ்சம் நாள் கழித்து வரப்போகின்றது!
12/18/2009 5:01:00 AM