சென்னை, டிச. 18: "இன்றைய வாழ்க்கையில் இலக்கியம்' என்ற பொருளில் சிங்கப்பூரில் 7-ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற உள்ளது.÷அடுத்த ஆண்டு மே 15, 16 தேதிகளில், சிங்கப்பூரில் உள்ள டிண்டேல் கல்லூரியில் இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது.÷ம களிர் மேம்பாட்டுக்கான ஆசியக் கவுன்சில், டிண்டேல் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து சென்னை, கலைஞன் பதிப்பகம் இக்கருத்தரங்கை நடத்துகிறது.÷பல்கலைக்கழக, கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் இதில் பங்கேற்கலாம். கட்டுரைகள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஐந்து பக்கங்களுக்குள் அமைய வேண்டும். இதில் பங்கேற்பதற்கு கட்டணம் உண்டு.÷மேலும் விவரங்களுக்கு முனைவர் அரங்க. பாரி (9842281957), பேராசிரியர் அபிதா சபாபதி (9677037474) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக