புதன், 16 டிசம்பர், 2009

தலையங்கம்: பட்​டி​யல் போடுங்​கள்



உடல் உறுப்பு தானம் செய்​வோர் எண்​ணிக்கை பெருகி வரு​வ​ தும்,​​ அத​னால் பலர் பய​ன​டைந்து வரு​வ​தும் மகிழ்ச்சி தரும் செய்​தி​கள்.​ உடல் உறுப்பு தானம் பற்​றிய விழிப்​பு​ணர்வு,​​ ஹிதேந்​தி​ர​னின் உடல் உறுப்​பு​க​ளைத் தானம் அளிக்க முன்​வந்த டாக்​டர் தம்​ப​தி​யால் தமிழ்​நாடு முழு​வ​தும் பர​வ​லா​யிற்று.​ தற்​போது மூளைச் சாவு ஏற்​பட்ட நோயா​ளி​க​ளின் உறுப்​பு​க​ளைத் தான​மாக அளிக்க முன்​வ​ரு​வோர் எண்​ணிக்​கை​யும் அதி​க​ரித்து வரு​கி​றது.​ ​தமிழ்​நாடு சுகா​தா​ரத் துறைச் செய​லர் சுப்​பு​ராஜ் குறிப்​பி​டு​வ​தைப் போல,​​ சரா​ச​ரி​யாக வாரம் ஒரு உறுப்பு தான உடல் வந்​து​கொண்​டி​ருந்த நிலைமை மாறி​யுள்​ளது.​ இம்​மா​தம் 10,​ 12 ஆகிய இரு நாள்​க​ளில் 5 உறுப்​பு​தான உடல்​கள் பெறப்​பட்டு,​​ பல்​வேறு உறுப்​பு​மாற்று அறு​வைச் சிகிச்​சை​யால் 15 பேர் ​ பய​ன​டைந்​துள்​ள​னர்.​ ​ இது​வரை 100 சிறு​நீ​ர​கங்​கள்,​​ 14 கல்​லீ​ரல்​கள் தேவை​யான நோயா​ளி​க​ளுக்​குப் பொருத்​தப்​பட்​டுள்​ளன.​விழிப் ​பு​ணர்வு மேலும் அதி​க​ரிக்​கும்​போது உறுப்​பு​தான உடல்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் கிடைக்​கும் என்​ப​தில் சந்​தே​க​மில்லை.​ ஆனால் இந்த உறுப்​பு​க​ளைப் பெறு​வ​தில் சங்கி​லித் தொடர் நிறு​வன மருத்​து​வ​ம​னை​கள் முன்​னு​ரிமை பெறு​வ​தை​யும்,​​ பண​வ​சதி படைத்​த​வர்​கள் மட்​டுமே இத்​த​கைய மருத்​து​வ​ம​னை​க​ளில் ​ உறுப்பு மாற்​றுச் சிகிச்​சை​யால் பயன்​பெ​று​கி​றார்​கள் என்​ப​தை​யும் பார்க்​கும்​போது,​​ பழை​ய​ப​டியே முறை​கே​டு​கள் தொடங்​கி​வி​டுமோ என்ற அச்​சம் எழு​கி​றது.​உடல்​தா​னம் செய்​யும் குடும்​பத்​தி​னர் ஏழை,​​ நடுத்​தர வரு​வாய்ப் பிரி​வி​னர்,​​ பணக்​கா​ரர்​கள் என்று பல வித​மாக இருக்​கி​றார்​கள்.​ அவர்​கள் இந்த உறுப்​பு​கள் யாருக்​குப் பொருத்​தப்​பட வேண்​டும் என்று விருப்​பம் தெரி​விப்​ப​தில்லை.​ விருப்​பம் தெரி​விக்​க​வும் முடி​யாது.​ உடல்​உ​றுப்பு மாற்​றுச் சிகிச்சை யாருக்கு நடத்த இய​லும் என்​ப​தை​யும்,​​ தானம் பெற்ற உறுப்​பின் அளவு,​​ திசுக்​கள் அதைப் பொருத்​திக்​கொள்​ளும் நோயா​ளி​யின் உடல் ஏற்​குமா என்​ப​தை​யும் தீர்​மா​னிக்க வேண்​டி​யது மருத்​துவ வல்​லு​நர் குழு​தான்.​உறுப்பு மாற்​றுச் சிகிச்​சைக்​கான நவீன மருத்​து​வக் கரு​வி​களை வைத்​தி​ருக்​கும் மருத்​து​வ​ம​னை​கள் அனைத்​துமே பெரிய,​​ நிறு​வ​ன​மாக்​கப்​பட்ட மருத்​து​வ​ம​னை​க​ளாக உள்​ளன.​ விதி​வி​லக்​காக,​​ சென்​னை​யில் தலைமை அரசு மருத்​து​வ​ம​னை​யி​லும்,​​ ​ அதி​க​பட்​ச​மாக ஸ்டான்லி மருத்​து​வ​மனை அல்​லது கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​ம​னை​க​ளில் இந்த வசதி இருக்​கக்​கூ​டும்.​ மற்​ற​படி,​​ மாவட்ட அள​வி​லான அரசு மருத்​து​வ​ம​னை​க​ளில் இதற்​கான வாய்ப்​பு​கள் இல்​லவே இல்லை என்​ப​து​தான் ​ நிலைமை.​உடல்​தா​னம் செய்​வோர் எந்​த​வித பிர​தி​ப​ல​னும் எதிர்​பா​ரா​மல்,​​ மூளை இறப்​புக்கு உள்​ளான தங்​கள் குடும்ப அங்​கத்​தி​ன​ரின் உடல்​உ​றுப்​பு​கள் யாருக்​கா​வது பயன்​ப​டட்​டுமே என்​கிற நல்​லெண்​ணத்​தில் மட்​டுமே அளிக்​கின்​ற​னர்.​ இவ்​வாறு இல​வ​ச​மாக வழங்​கப்​ப​டும் உடல்​உ​றுப்​பு​கள் எந்​த​வொரு தனிப்​பட்ட மருத்​து​வ​ம​னைக்​கும் சொந்​த​மா​னது அல்ல.​ தற்​போ​தைய நடை​மு​றை​யில் உறுப்பு மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​கான ஒருங்​கி​ணைப்​பா​ளரை அரசு நிய​மித்து,​​ தான​மா​கக் கிடைத்த உறுப்​பு​கள் யாருக்கு அளிக்​கப்​பட வேண்​டும் என்​பது முறைப்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் இந்த நடை​மு​றை​யில் வெளிப்​ப​டைத் தன்​மையை தமி​ழக அரசு புகுத்த வேண்​டும்.​ ​தமிழ்​நாட்​டில் உடல்​உ​றுப்பு தானத்தை எதிர்​பார்த்​துக் காத்​தி​ருக்​கும் அனைத்து நோயா​ளி​க​ளும் தங்​கள் பெய​ரைப் பதிவு செய்​ய​வும்,​​ அவ்​வாறு பதிவு செய்து காத்​தி​ருப்​போர் பட்​டி​யலை வெளிப்​ப​டை​யாக இணைய தளத்​தில் வெளி​யி​ட​வும் வேண்​டும்.​ அமெ​ரிக்​கா​வில் உறுப்பு பெறு​தல் மற்​றும் மாற்​றிப்​பொ​ருத்​து​தல் இணை​யம் ​(ஞட​பச)​ உள்​ளது.​ இதில் நோயா​ளி​கள் தங்​கள் பெய​ரைப் பதிவு செய்​து​கொள்​கி​றார்​கள்.​ அவர்​க​ளது நோயின் தீவி​ரம் மற்​றும் திசுப் பொருத்​தம் ஆகி​ய​வற்​றைக் கொண்டு மருத்​து​வக் குழு அப்​பட்​டிய​லில் உள்ள நோயா​ளி​க​ளைத் தீர்​மா​னிக்​கி​றது.​ அதே​போன்ற நடை​முறை தமிழ்​நாட்​டி​லும் உரு​வாக்​கப்​பட வேண்​டும்.​ ​ சிறு​நீ​ர​கத் திருட்​டு​கள் நடை​பெற்ற தமி​ழ​கத்​தில்,​​ இத்​த​கைய வெளிப்​ப​டைத் தன்மை மிக​வும் அவ​சி​ய​மா​கி​றது.​ ​இதனை வலி​யு​றுத்த இன்​னொரு முக்​கிய கார​ணம்,​​ தமி​ழ​கத்​தில்​தான்,​​ முதல்​மு​றை​யாக தானம்​பெற்ற கல்​லீ​ரல் ஒரு அயல்​நாட்​ட​வ​ருக்கு அண்​மை​யில் பொருத்​தப்​பட்​டுள்​ளது.​ சென்னை தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில் கல்​லீ​ரல் அழற்சி நோயால் அவ​திப்​பட்டு வந்த இராக் நாட்​டைச் சேர்ந்த நோயாளி பய​ன​டைந்​தி​ருக்​கி​றார்.​ ஸ்டான்லி அரசு மருத்​து​வ​ம​னை​யி​லும்,​​ ஒரு தனி​யார் மருத்​து​வ​ம​னை​யி​லும் கல்​லீ​ரல் மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​கான பொருத்​த​மான ​ நோயா​ளி​கள் இருக்​கி​றார்​களா என்று தேடி​ய​போது,​​ அங்கு இல்​லாத கார​ணத்​தால்,​​ ஒரு உறுப்பு வீணா​கி​வி​டக் கூடாதே என்​கிற நோக்​கில்,​​ அயல்​நாட்​ட​வர் தேர்வு செய்​யப்​பட்​ட​தாக விளக்​கம் தரப்​ப​டு​கி​றது.​ இது உண்​மை​யாக இருக்​க​லாம்.​ இருப்​பி​னும்,​​ இதே​போன்ற நிலைமை தொட​ரக்​கூ​டாது.​ ஏனென்​றால்,​​ இந்​தி​யா​வுக்கு மருத்​து​வச் சிகிச்​சைக்​காக வரு​வோர் எண்​ணிக்கை ஆண்​டு​தோ​றும் அதி​க​ரித்​துக்​கொண்டே வரு​கி​றது.​ அமெ​ரிக்​கா​வில் ஆகும் செல​வைக் காட்​டி​லும் மிகக் குறைந்த செல​வில்,​​ இங்கே ஐந்​து​நட்​சத்​திர ஹோட்​டல் போன்ற வச​தி​யுள்ள தனி​அ​றை​க​ளில் தங்கி,​​ தர​மான சிகிச்சை பெற்று நல​மா​கத் திரும்ப முடி​கி​றது என்​ப​து​தான் இதற்​குக் கார​ணம்.​ அவ்​வாறு வரு​வோர் எவ்​வ​ளவு பணம் வேண்​டு​மா​னா​லும் செல​வ​ழிக்​கத் தயா​ராக வரு​கின்​ற​னர்.​அமெ ​ரிக்கா உள்​ளிட்ட மேலை நாடு​க​ளில் உறுப்பு மாற்று அறு​வைச் சிகிச்​சைக்​காக ஒரு சிறு​நீ​ர​கமோ அல்​லது கல்​லீ​ரலோ,​​ இத​யமோ வேண்​டும் என்​றால் அதற்​கா​கக் காத்​தி​ருப்​போர் பட்​டி​யல் மிக​மிக நீள​மாக இருக்​கும்.​ கிடைத்​தா​லும் அதற்​கான செலவு குறைந்​தது ஒரு லட்​சம் டாலர் ஆகி​றது.​ இது போதுமே-​இந்​திய மருத்​துவ உல​கில் முறை​கே​டு​களை முடுக்​கி​வி​டு​வ​தற்கு!​உடல்​தா​னம் குறித்த விழிப்​பு​ணர்வு பர​வ​லா​கும் இந்த வேளை​யில்,​​ உடல்​உ​றுப்​பைத் தானம் பெறக் காத்​தி​ருப்​போர் மற்​றும் தானம் அளித்​தோர்,​​ சிகிச்சை நடை​பெற்ற மருத்​து​வ​ம​னை​கள் பற்றி வெளிப்​ப​டை​யாக அறி​விப்​பது முறை​கே​டு​க​ளைப் பெரு​ம​ளவு குறைக்​கும்.​​
கருத்துக்கள்

தொலைநோக்குடன் கூடிய மிக ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதப்பட்டு்ள்ளது. வரும் முன் காப்பதற்கு உரிய அறிவுரை ஆசிரியவுரையில் உள்ளது. செல்வர்கள் மட்டுமே பயன்படும் நிலை இருப்பின் ஊழல்தான் பெருகும். எனவே, உடனே பயனாளர் காத்திரு்ப்புப் பட்டியலை உருவாக்க வேண்டும். அருமையான உரை எழுதியவருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/16/2009 4:25:00 AM

தமிழ்​நாட்​டில் உடல்​உ​றுப்பு தானத்தை எதிர்​பார்த்​துக் காத்​தி​ருக்​கும் அனைத்து நோயா​ளி​க​ளும் தங்​கள் பெய​ரைப் பதிவு செய்​ய​வும்,​​ அவ்​வாறு பதிவு செய்து காத்​தி​ருப்​போர் பட்​டி​யலை வெளிப்​ப​டை​யாக இணைய தளத்​தில் வெளி​யி​ட​வும் வேண்​டும்.​ அமெ​ரிக்​கா​வில் உறுப்பு பெறு​தல் மற்​றும் மாற்​றிப்​பொ​ருத்​த இணை​யம் ​உள்​ளது.​ இதில் நோயா​ளி​கள் தங்​கள் பெய​ரைப் பதிவு செய்​து​கொள்​கி​றார்​கள்.​ அவர்​க​ளது நோயின் தீவி​ரம் மற்​றும் திசுப் பொருத்​தம் ஆகி​ய​வற்​றைக் கொண்டு மருத்​து​வக் குழு அப்​பட்​டிய​லில் உள்ள நோயா​ளி​க​ளைத் தீர்​மா​னிக்​கி​றது.​ அதே​போன்ற நடை​முறை தமிழ்​நாட்​டி​லும் உரு​வாக்​கப்​பட வேண்​டும். N.A. Mohamed Sadiq TN51/613702

By Mohamed Sa'diq
12/16/2009 3:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக