அமெரிக்காவே! நீ சிங்களத்திடம் அடி பணிவதால் வல்லரசும் அல்ல! தமிழர்களின் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தமையால் நல்லரசுமல்ல! மனிதநேயம் மிகுந்த அமெரிக்கர்களே! உங்கள் அரசின் போக்கை மாற்றித் தமிழ ஈழத்திற்கு விரைவில் ஏற்பளிக்கச் செய்யுங்கள்! தம் நாட்டிற்கு வேண்டிய மறுவாழ்வுப் பணிகளைத் தமிழ் ஈழ அரசு செய்து கொள்ளும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/17/2009 3:34:00 AM
இதுவரை நடைபெற்ற மனிதப் படுகொலைகளுக்கு எதிராக எந்நடவடிக்கையும் எடுக்காமல் கிணற்றுத்தவளையாகக் கத்திக் கொண்டு மனிதஉரிமைக் காவலனாக அமெரிக்கா நடித்தது போதும். நாளும் பொழுதும் ஈவிரக்கமின்றிப் படுகொலைகளும் வதைகளும் புரிவோனிடம் ஒற்றுமையாக இருக்குமாறு உயிரிழந்தோர் குடும்பத்தாரிடமும் உறுப்பிழந்தோரிடமும் வதைபடுவோரிடமும் அறிவுரை கூறுவதுதான் மனித நேயமா? சீனாவின் பக்கம் சாயும சி்ங்களத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காகப் போலியாக மிரட்டிப் கொ்ணடிராமல் ஏதும் நடவடிக்கை எடுக்க இயலும் என்றால் எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக அரசியல்வாதிகள் போல் அறிக்கை விட்டு ஏமாற்றாமல் அமைதி காக்க வேண்டும். கொலைகாரக் கும்பலைத் தண்டிக்காமல் அக்கும்பலால் வன்கொடுமைக்கு ஆளான குடும்பத்தாருக்கு மறுவாழ்வு தருமாறு கோரிக்கை விடுவது நகைப்பிற்குரியது அல்லவா? அமெரிக்காவே! நீ சிங்களத்திடம் அடி பணிவதால் வல்லரசும் அல்ல! தமிழர்களின் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தமையால் நல்லரசுமல்ல! மனிதநேயம் மிகுந்த அமெரிக்கர்களே! உங்கள் அரசின் போக்கை மாற்றித் தமிழ ஈழத்திற்கு விரைவில் ஏற்பளிக்கச் செய்யுங்கள்! தம் நாட்டிற்கு வேண்டிய மறுவாழ்வுப்
12/17/2009 3:33:00 AM