பாலக்காடு:திருச்சூரில் நடந்து வரும் கண்காட்சியில், அசத்தலான கருவேல மரத்தினால் ஆன கார், மிதிவண்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.கேரள மாநிலம், திருச்சூர் தக்கின்காடு மைதானத்தில் "யந்திரம் -2009' கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகம் திருவள்ளுரைச் சேர்ந்த தச்சர் லட்சுமணன் என்பவர் இன்ஜின், கார் டயர்கள் தவிர, கருவேல மரத்தினால் பாடி தயாரித்து, "அப்பார் -25' என்ற பெயரில் அறிமுகம் செய்தார்.பழைய மாருதி காரின் இன்ஜின், நான்கு டயர்கள் மட்டுமே இக்காரில் பொருத்தப்பட்டுள்ளன. காரின் மேல் பகுதி திறந்த நிலையில் உள்ளது. இதை உருவாக்க, இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவானது. டிரைவர் உட்பட நான்கு பேர் சுகமாக பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 70 கி.மீ., வேகத்தில் இந்த காரை இயக்கமுடியும் என்றும், மரத்தினால் மிதிவண்டியும் தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார். இவரது மர சைக்கிளும், கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக