மண்டியிடும் தமிழினமும் மார்தட்டும் சிங்களமும்
33 வருட போராட்டம் தற்போது பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்தவேளை, வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி படையெடுக்கும் சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் மத்தியில் விசத்தை கரைத்துக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டும் தலை தூக்காதவாறு பாதுகாத்துக் கொள்ள இவர்கள் ஆடும் நாடகங்கள் தனி. தமிழில் பேசுவதும், தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சென்று பரிசுகள் வழங்குவதுமாக இவர்கள் நாடகப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
சமீபத்தில் வன்னி சென்று பலியான இராணுவத்தினருக்கு தூபி அமைத்தார் ராஜபக்ஷ. அதனைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட மகிந்த அங்கிருக்கும் தமிழ் சிறுமியருக்கு சில பொருட்களை அன்பளிப்புச் செய்துள்ளார். அவற்றைப் பெற்றுக்கொள்ள வரிசையாக நின்ற சிறுமியர் ஒவ்வொருவராக மகிந்தவின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு பரிசுகளை வாங்கிச் சென்றுள்ளனர். இவ்வாறு யார் செய்யச் சொன்னது? மாதா பிதா, குரு தெய்வம், என்பார்கள் அவர்கள் காலில் விழலாம் இந்த ரத்தக் காட்டேரியில் கால்களில் விழச்சொல்லி யார் சொன்னது?
அதிலும் தமிழனே தமிழனுக்கு எதிரி என்பது போல , அங்கு நின்றிருந்த சில ஆசிரியர்கள் சிறுமியரை இவ்வாறு செய்யும் படி கட்டாயப்படுத்தியும் உள்ளனராம்.
செஞ்சோலையிலும் சிறுவர்களை வளர்த்தான் எமது தேசிய தலைவன். அவர் அங்கு போகும் போது எந்தப் பிள்ளைகளாவது தலைவர் கால்களை தொட்டுக் கும்பிட்டிருக்குமா இல்லை அப்படி நடந்து கொள்ள பிள்ளைகளைத் தான் தலைவன் அனுமதித்திருப்பானா. மகிந்த என்ன நெல்சன் மண்டேலாவா, இல்லை காந்தியா, மகிந்த கால்களை பிடித்து வாழும் அவல நிலைக்கும் நாம் தள்ளப்பட்டிருகிறோமா என எண்ணிப் பாருங்கள் தமிழர்களே. இன்று தாய் தந்தை இழந்து ஆதரவற்றோராக வாழும் எமது குழந்தைச் செல்வங்களின் அவல் நிலையைப் பாருங்கள்.
இச் சிறுவர்களின் தாய் தந்தையரை கொன்றொழித்து, இவர்களை அனாதைகளாக்கி இப்போது காலில் விழவைத்தும் வேடிக்கை பார்க்கிறான் இந்தக் கொடுங்கோலன். அச்சம் கலந்த பயத்துடன் சிறுமிகள் மேடை ஏறி இவனிடம் மண்டியிட்டு பொருட்களை பெற்றுக் கொள்ளும் நிலை. ஈழத் தமிழர்கள் வரலாற்றில் இதுபோன்ற பின்னடைவை இனியும் நாம் சந்திக்கக் கூடாது, சிந்திக்க வேண்டும்! வரும் புதுவருடத்தில் நாம் ஒரு புதுப் பொலிவாக மாறவேண்டும், எமக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை மறந்து தமிழீழ தேசியத்திற்காய் பாடுபடுவோம் ஒன்றிணைவோம்.
மண்டியிட்டு, கைகட்டி, வாய்பொத்தி வாழ்வதெல்லாம் ஒருவாழ்வா, சுதந்திர தமிழீழத்தில் சுவாசக் காற்றுக்குக் கூடச் சுதந்திரம் இருக்கவேண்டும், புலத்தில் அரசியல் போரும் களத்தில் ஆயுதப் போரும் எப்போது ஆரம்பமாகிறதோ அப்போதே எமது விடிவு எட்டும். அதுவரை போராடுவோம், தமிழர்களே... இன்று நாம் மண்டியிடலாம் நாளை சிங்களவன் மண்டையும் தெறிக்கலாம் நாம் துணிந்து நின்றால்.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 1857
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக