விழுப் புரம், டிச. 18: சினிமா இல்லாத நியூஸ் பிளஸ் என்ற புதிய சேனல் வரும் பொங்கலுக்கு செயல்படத் தொடங்கும் என்று இந்திய சமூக நீதி இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் எம்.எஸ்ரா சற்குணம் தெரிவித்தார்.இது குறித்து இவர் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சி னிமா இல்லாத புதிய சேனல் வரும் பொங்கலுக்குள் தொடங்க உள்ளோம். இந்த சேனலில் செய்திகள் மற்றும் மக்களுக்கு தேவையான, அறிவை பெருக்கிக் கொள்ளக்கூடிய தகவல்கள் வழங்கப்படும்.கி றிஸ்தவம் தொடர்பான நிகழ்ச்சி தினமும் 4 மணி நேரம் ஒளிபரப்பாகும். இதற்கு விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபாகர் ஜெயராஜ் நிர்வாக இயக்குநராக இருப்பார் என்றார். பேட்டியின்போது இந்திய சமூக நீதி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் ஜெயராஜ் உடனிருந்தார்.
கருத்துக்கள்
பண்பாட்டைச் சீரழிக்கும் திரைப்படங்களைத் தவிர்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசையாகத் தெரியவில்லை. திரைப்படம் முதலானவற்றை வெறுக்கும் உணர்வு கொண்ட கிறித்துவ சமயப் பிரிவினர் பரப்புரைக்காகத் தொடங்கப்பட்டதாகத்தான் தெரிகின்றது. தமிழ்ப்பெயர் அல்லாத அலைவரிசைகளைத் தொடங்கத் தமிழ் நாட்டில் தடை விதிக்க வேண்டும். சன்,கே, என்றெல்லாம் ஆளும் குடும்பத்தினர் வைத்துள்ள பெயர்களை மாற்றினால்தான் தமிழ் வாழும். சமயப் பரப்புரைகளுக்கு இடம் கொடு்த்து விட்டுப் பின்னர் கட்டாயச் சமய மாற்றம் எனக் கரடியாய் கத்தினாலும் பயன் இல்லை என்பதையும் உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/19/2009 4:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/19/2009 4:50:00 AM